கண்ணீர் அஞ்சலி அமரர் கோபாலகிருஸ்ணன் (தோழர்.கண்ணன்) --புளொட் சுவிஸ் கிளை
இலங்கை புங்குடுதீவை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் சுரிச்சை வதிவிடமாகவும் கொண்ட கிளிநொச்சி கண்ணன் என்று அழைக்கப்படுகின்ற அம்பலவாணர் கோபாலகிருஸ்ணன் கழகத்தின் (PLOTE) சுவிஸ்கிளை உறுப்புரிமைத் தோழனாய் முன்நாளில் கிளையின் செயற்பாடுகளில் சுவிஸ்கிளைத் தோழர்களுடன் தோளோடு தோள்நின்று உழைத்தவர். பல்வேறு நெருக்குவாரங்கள், அச்சுறுத்தல்களை கழக சுவிஸ்கிளை எதிர்கொண்ட போது, அனைத்துச் சவால்களுக்கும் தோழர்களுடன் நின்று முகம் கொடுத்தவர். இவர் தொடர்ந்தும் கழகத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருந்ததுடன், கிளையின் வேலைத்திட்டங்களிலும் பங்களிப்பினை ஆற்றி வந்தார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருடனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாமும் இத்துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு, தோழருக்கு எமது அஞ்சலிகளையூம் செலுத்துகின்றோம்.
அமரர் கோபாலகிருஸ்ணன் (தோழர்.கண்ணன்)
***எத்தனையோ இடர்களுக்கு துணை நின்று துணிந்து முகம்கொடுத்த உன்னை வாட்டிய துயரம் ஏதோ? தோழா!
***நீ தனிமைநாடிச் சென்றதேனோ? எம்மைவிட்டு தனியே சென்றதேனோ? தோழா!
***பல முறை மரணத்தை வென்ற நீ, இம்முறை எமனிடம் மார்கொடுத்துப் போராடி தோற்றதேனோ? தோழா!
எம் உயிர் வாழும்வரை வரை உன் நினைவூகளும் வாழும் தோழா!
***இவ்வூலகில் மறுபடியூம் நாம் வந்துதித்தால் மீண்டும் சந்திப்போம் அப்போதாவது நீண்டநாள் கூடியிருப்போம் தோழா!
-புளொட் சுவிஸ் கிளை.
0 comments :
Post a Comment