விடமாட்டோம்! விடவே மாட்டோம்!! எமது அடுத்த இலக்கு ‘அபாயா’
சூளுரைக்கிறது பொது பல சேனா
முஸ்லிம்களின் ஹலால் விடயத்துடன் நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை. எமது அடுத்த இலக்கு ‘அபாயா’ இதற்கான எமது போராட்டம் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பமாகும் என பொது பல சேனா இயக்கம் நேற்று (10) தெரிவித்துள்ளது.
ஹலால் விவகாரத்தில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம். இது பௌத்த தேசம். இங்கு பௌத்த மதக் கருத்துக்களும் எண்ணக்கருக்களுமே இருக்க வேண்டும். எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவை என நாம் வெகு விரைவில் அறிவிப்போம் எனவும் அவ்வியக்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை வர்த்தக சம்மேளம், பௌத்த தேரர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று திங்கட் கிழமை கொழும்பு சினமன் கிராண்ட் ஓட்டலில் நடைபெற்றது.
இம்மாநாட்டின் போது கருத்துரைத்த பெல்லன்வெல விமலரத்ன தேரர், இன்றைய தினம் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய நந்நாளாகும். ஹலாலுக்குக் கிடைத்த முடிவானது நாமனைவரும் பெற்ற வெற்றியாகும்.
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடாகும். இங்கு அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்படுகின்றன. மதம் சார்ந்த இவ்வாறான பிரச்சினைகள் மேலெழும்போது மத்த் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
2 comments :
எத்தனை உலமா சபை இருந்தென்ன..?எத்தனை முஸ்லிம் அரசியற் கட்சிகள்-தலைவர்கள் இருந்தென்ன...? எத்தனை முஸ்லிம் இயக்கங்கள் இருந்தென்ன...? நமது அடிப்படை உரிமைகளைக் கூடக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோமே...அப்புறம் எதற்கு இந்த சபைகளும் உலமாக்களும் கட்சிகளும் தலைவர்களும் இயக்கங்களும் அங்கத்தவர்களும்....?
பொறுங்கள்...அடுத்தது புர்கா; அடுத்தது ஹிஜாப்; அடுத்தது பர்தா; அடுத்தது முந்தானை; அதற்கடுத்தது பாவாடை...எல்லாவற்றையும் தேச நலன் கருதி விட்டுக் கொடுங்கள்.
அதன் பின்னர் தொப்பி-தாடி-தஸ்பீஹ் மாலை...எல்லாவற்றையும் சமூக நல்லிணக்கம் கருதி விட்டுக் கொடுங்கள்.
வெட்கமோ மரியாதையே இல்லாத இக்கூட்டத்துக்கு தலை குனியாதீர்கள். போராடுங்கள். பெண்மணிகளின் உரிமையைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுங்கள்.
Post a Comment