இலங்கைக்கு எதிராக 46NGOகள், அறிக்கை
இலங்கைக்கு எதிராக 46 அரசசார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை பேரவையில், நேற்று உண்மைக்கு புறம்பான அறிக்கையை சமர்பித்துள்ளதாகவும் இந்த நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் இலங்கையை சேர்ந்த நிறுவனங்கள் எனவும் திவயின கூறியுள்ளதுடன் ஸ்பெயின், கனடா, மெக்சிகோ, பிரித்தானியா, அமெரிக்கா, செக், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய 8 நாடுகள் இலங்கையிடம் மனித உரிமை குறித்து கேள்விகளை தொடுத்துள்ளன என திவயின ஊடம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நாடுகள், வட மாகாண தேர்தல், அதியுயர் பாதுகாப்பு வலயம், திருகோணமலையில் 05 மாணவர்களின் படுகொலை, மூதூர் தன்னார்வ பணியாளர்களின் கொலை தொடர்பான கேள்விகளை முன்வைத்துள்ளன.
இதனை தவிர செனல் 4 தொலைக்காட்சி வீடியோ படங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம், சாட்சியாளர்களை பாதுகாக்கும் விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நிறைவேற்றப்படாமை குறித்தும், அமெரிக்கா மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிரான கேள்விகளை முன்வைத்துள்ளது என திவயின கூறியுள்ளது
0 comments :
Post a Comment