Monday, March 11, 2013

17 வயது இளம்பெண்ணை 12 வது திருமணம் செய்த ஒபாமாவின் அண்ணன் மாலிக்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அண்ணனான மாலிக் ஒபாமா கண் நிறையக் கனவுகளுடன் வலம் வந்து கொண்டுள்ளார். கென்யாவின் அதிபராவதே தனது லட்சியம் என்று அவர் கூறுகிறார். இவருக்கு மொத்தம் 12 மனைவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. டெய்லி மெய்லுக்கு அவர் ரொம்பவே மனம் திறந்த பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். தனது தம்பி அமெரிக்க அதிபரானது போல தானும் ஒரு நாள் கென்யாவின் அதிபராவது உறுதி என்று கூறுகிறார் மாலிக். இருப்பினும் கடந்த வாரம் நடந்த கென்ய தேர்தலில் இவர் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

இவருக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் இடையே இன்னும் நல்ல தொடர்பு உள்ளதாம். அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வார்களாம். வருடத்திற்கு ஒருமுறை வாஷிங்டன் போய் தம்பியைப் பார்த்து விடுவாராம் மாலிக். கணக்காளராகப் பணியாற்றி வரும் மாலிக், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி வருகிறார். தனது தம்பி தங்களது குடும்பத்துக்குப் பணம் எதுவும் தருவதில்லை என்று வருத்தப்படும் மாலிக், தனது கென்ய குடும்பத்துக்கு ஒபாமா நிதியுதவி தரலாம். இருப்பினும் நான் அதை வலியுறுத்துவதில்லை என்றார்.

தம்பி பெயரைப் பயன்படுத்தி நான் புகழ் பெற பார்க்கிறேன் என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அது தவறு. என் தம்பியின் பெயரை நான் சொல்லாமல் வேறு யார் சொல்வது என்று கோபமாக கேட்கிறார் மாலிக். மேலும் ஒபாமாவுக்கு முன்பேதான் பிறந்து விட்டதாக கூறும் மாலிக், எனக்குப் பின்னால் பிறந்தவர்தான் அமெரிக்க அதிபர் என்றும் மார் தட்டிச் சொல்கிறார். கடந்த வாரம் நடந்த நாடு தழுவிய தேர்தலில் சியாயா பகுதி ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டிருந்தார் மாலிக். ஆனால் தோல்வியைத் தழுவினார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதைப் பெரிய தோல்வியாக நினைக்கவில்லை. கென்ய அதிபராவேன். அது உறுதி. அதுதான் எனது ஒரே லட்சியம் என்று கூறுகிறார்.

மாலிக்குக்கு மொத்தம் 12 மனைவிகள். இதில் 12வதாக அவர் மணந்துள்ள பெண்ணுக்கு 17 வயதுதான் ஆகிறது. அவரது பெயர் ஷீலா அன்யாங்கோ. வெறும் 24 பவுண்டு பணத்தை நன்கொடையாக கொடுத்து இப்பெண்ணை மணந்து கொண்டாராம் மாலிக். ஆனால் தன்னை மாலிக் எப்போது பார்த்தாலும் அடித்து உதைப்பதாக அந்தப் பெண் இப்போது புலம்புகிறார். மாலிக்கைத் திருமணம் செய்து கொண்டதுதான் நான் செய்த பெரிய தப்பு.எப்போது பார்த்தாலும் அடிக்கிறார். அசிங்கமாக பேசுகிறார். கத்திக் கொண்டு இருக்கிறார என்று புலம்புகிறார் ஷீலா. ஆனால் தான் மனைவியை அடிப்பதில்லை என்று மறுக்கிறார் மாலிக்.

ஒபாமா மற்றும் மாலிக்கின் தந்தை ஒருவர்தான். ஆனால் தோற்றத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது. மாலிக் சுத்தமான கென்யர் போல தோற்றமளிக்கிறார். இருப்பினும் அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே பாசப் பிணைப்பும், நட்பும் உள்ளதாம். திருமணத்திற்கு முன்பு ஒபாமாவின் மனைவி மிஷல் கென்யா வந்து ஒபாமா குடும்பத்தினரை சந்தித்துப் பேசி மகிழ்ந்தாரம். மிஷல் ஒரு அருமையான பெண் என்று பாராட்டுகிறார் மாலிக்.

2 comments :

Anonymous ,  March 11, 2013 at 8:38 PM  

ஒபாமா மற்றும் மாலிக்கின் தந்தை ஒருவர்தான். ஆனால் தோற்றத்தில் பெரும் வித்தியாசம் உள்ளதுக்கு காரணம் ஒபமாவின் தாயார் அமெரிக்கப் பெண்மணி.

Anonymous ,  March 12, 2013 at 3:30 PM  

We think that he has a place in the guinness book,that´s all.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com