Thursday, February 28, 2013

லகர, ளகர வேறுபாட்டால் இலங்கையில் நடந்த கொலைகள் எத்தனை!

சூரன் போருக்கும் இராமாயண போருக்கும் என்ன வித்தியாசம் என்று ஒப்பிட்டு நோக்குவது மனித வாழ்வியலுக்கு வேண்டிய நல்ல பல அனுபவங்களை பெற்றுக் கொள்ள உதவும். சூரன் போரில் ஆட்கொள்ளல் நடைபெறுகின்றது. இராமாயணத்தில் ஆட்கொல்லல் நடைபெறு கின்றது. ஆட்கொள்ளுதல் என்பதும் ஆட்கொல்லல் என்பதும் வெறுமனே லகர ளகர வேறு பாட்டுடன் மட்டும் தொடர்புடையது என்று யாரும் நினைத்துவிடக்கூடாது. லகரத்தில் கொலையும் ளகரத்தில் நித்திய பேரின்பப் பேறும் கிடைக்கின்றது.

அப்படியானால் இரு நிலைப்போரில் நடந்தது என்ன என நோக்குவது பொருத்துடையது.

சூரன் போரில் முருகன் தன் திருப்பெருவடி வத்தைக் காட்டி நிற்கிறான். அப்பெரு வடிவம் கண்ட சூரன் கரம் குவித்து திருப்பெருவடிவத்தை தரிசிக்கின்றான். முருகா! நீயே பெரியவன் என்று உணர்கின்றான். எனினும் மானமொன்றே அவனைத் தடுத்து நிற்கின்றது. முருகனைப் பாலன் என்றிருந்த சூரன் அவனது திருப்பெருவடிவத்தைக் கண்டு அழுது தொழுது நின்றபோதே அவனுக்கான ஆட்கொள்ளல் கிடைத்துவிடுகிறது.

மானத்தின் பொருட்டும் உரிமையின் பொருட்டும் போரிடுவது தமிழர் பண்பாட்டில் உயரிய கடமை யாக கருதப்படுவதால் போரில் சூரன் ஆட்கொள்ளப்படுகின்ற மிக உன்னதமான அற்புதம் நடந்தேறுகிறது.

ஆனால், இராமாயணத்தில் நிலைமை அதுவன்று. அங்கு ஆணவம் தலைக்கேறி தாண்டவம் ஆடு கின்றது. உறவுகள் கொல்லப்படுகின்றனர் என்று தெரிந்திருந்தும் இராவணன் யுத்தத்தை நிறுத்தவில்லை. தன் அண்ணனுக்காக போர்க்களம் போகின்ற கும்பகர்ணன் இராவணனுக்கு ஆலோசனை கூறுகின்றான்.

அண்ணா! நான் போர்க்களத்தில் இறந்து விட்டேன் என்ற செய்தியை அறிந்த பின்னாவது சீதையை சிறையில் இருந்து விடுதலை செய்என்கின்றான். தன் அண்ணனுக்காக போர்க்களம் சென்று இராமனுடன் போரிட்டு கும்பகர்ணன் மரணிக் கின்ற போதிலும் இராவணன் சீதையை விடுதலை செய்யத் தயாரில்லை. சூர்ப்பனகையின் தூண்டலும் இராவணனின் அகந்தையும் சேர்ந்து அழிவைக் கொடுக்கின்றன.

ஆக, இராமாயணத்தில் அகந்தையின் காரணமாக ஆட்கொல்லல் நடந்தேறுகின்றது. இத்தத்து வத்தை இலங்கை நாடும் அவசரமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் மிக மோசமான போர்க் குற்றம் நடந்துள்ளதென ஜெனிவா கூட்டத் தொடரில் நவநீதம்பிள்ளை தெரிவித்திருப்பது சாதாரண விடயமல்ல மற்றவர்கள் கூறுகின்ற நல்ல ஆலோசனைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் நல்லது.

நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை என்பது உண்மை ஏன் எனில் நாம் நாடுவிட்டு நாடு போய் சண்டையிடவில்லையே நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுடன் மட்டுமே சண்டை நடைபெற்றது இதன் போது அரசதரப்பு மற்றும் பொதுமக்கள் பயங்கரவாதிகள் என பலர் பலியாகியிருந்தனார். ஒரு சண்டையில் பொதுமக்கள் இறப்பது உண்மையே இதனை மறக்க முடியாதது சிலசமயம் குடும்பத்துடன் இறப்பதும் வளமை இதில் தலைவர் மகன் வேறு ஏனைய பிள்ளைகள் வேறு என பிதித்துப்பார்க்க முடியாது.

இறுதிக்கட்டப்போரில் சிறுவர்கள் பலர் உயிர்பலி போனது உண்மை ஆனால் இதில் அரசு சுட்டதில் தான் சிறுவர்கள் இறந்தது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது ஏன் எனில் புலி சுட்திலும் பல சிறுவர்களது உயிர் போயுள்ளது இப்படியிருக்க வெறுமனே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது புலம்பெயர் தேசத்தின் இருப்பை நீடித்துக்கொள்ள இலங்கை அரசை மட்டுமே குற்றஞ்சாட்டுகின்றன எனவே உலகம் தற்போதைய நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும். அப்போதுதாக் தற்போது நிலவும் சமாதாக நிலமை நீடிக்கும்.

1 comments :

Anonymous ,  March 1, 2013 at 7:35 PM  

Symbolic propaganda,through a hired channel.Sorrowful and pathetic deaths
in Irag,Libya,Syria,Afghanistan are not in the eyes of of the particular channel.It is a big surprise,how this creations taking place in a country which has a parliament with the title name as mother of democratic parliaments.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com