Tuesday, February 5, 2013

அரிசோனா பாலைவனத்தில் ஊதாநிற உருண்டைகள் கண்டு பிடிப்பு- வேற்றுக்கிரகவாசிகள் வந்து போனார்களா?

.

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பல தகவல்கள் தற்போது வெளியாகிவரும் நிலையில் அரிசோனா பாலைவனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம உருண்டைகள் பெரும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளன.அப்பகுதிக்கு விஜயம் செய்த ஜெரடைன் வெர்காஸ் என்ற பெண்மணி ஊதா நிறமான பார்ப்பதற்கு பளிங்கு உருண்டைகள் போல சிலவற்றைக் கண்டுள்ளார்.

ஊதா நிறமான இவை பார்ப்பதற்கு பளிங்கு உருண்டைகள் போல காட்சியளித்ததாகவும் அவற்றை பிழியும் போது நீர்போன்ற திரவம் அதனுள்ளிருந்து வெளியாகியதாகவும் ஜெரடைன் தெரிவித்துள்ளார்.

இத்தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளதுடன் இவை தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கிடையில் இவை வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இவ்வுயிரினத்தின் பெயர் ஜெலி பங்கஸ் என தாவரவியல் நிபுணரொருவர் தெரிவித்துள்ளார். ஆயினும் இவ்விடயம் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை முன்னெடுத்துள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com