Thursday, February 7, 2013

பிரான்ஸைத் தொடர்ந்து பிரிட்டனிலும் ஓரின திருமணத்துக்கு அங்கீகாரம்!!

சமீபத்தில் பிரான்ஸில் ஓரினக் கலப்புத் திருமணத்துக்கும், குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கும் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப் பட்டது.இதைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை பிரிட்டனிலும் ஓரினக் கலப்புத் திருமணம் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக பிரிட்டனின் Commons இல்லத்தில் டோரி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

இதன் படி இரு பாலின ஜோடி தமக்கிடையே உறவு கொள்வதற்கும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதேயளவு உரிமை ஓரினக் கலப்பு ஜோடிக்கும் உள்ளது எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. எனினும் பிரிட்டனில் உள்ள பிரதான தேவாலயம் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் இச்சட்டத்தைத் தடை செய்வதற்காக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதற்கு அழுத்தம் தெரிவித்து வருகின்றது.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமெரூனிலால் முன்னெடுக்கப் பட்ட இந்த வாக்கெடுப்பில் பல அமைச்சர்களும், 50% வீதத்திற்கு மேற்பட்ட டோரி எம்பிக்களும் எதிராகவே வாக்களித்திருந்தனர். பிரிட்டனின் எதிர்க்கட்சியினர், பிரதமர் கெமரூனுக்கு நாட்டில் முக்கிய பிரச்சினைகளாக பொருளாதார மந்த நிலை ஆகியவை இருக்கும் போது இந்த ஓரினக் கலப்புத் திருமணத்துக்கான சட்டத்தைக் கொண்டு வந்து மிகச் சிறியளவான மக்களிடம் மலிவான அரசியல் ஆதாயம் திரட்டப் பார்க்கின்றார் எனக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும் கெமரூன் இது குறித்து விடுத்த அறிக்கையில் 'நான் திருமண சம்பிரதாயத்தில் அழுத்தமான நம்பிக்கை வைத்துள்ளேன். இதைப் பின்பற்றுவதற்கு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வளவு உரிமை உள்ளதோ அதேயளவு உரிமை ஒரே பலைச் சேர்ந்தவர்களுக்கும் உள்ளது. இது சமநீதி பற்றியது. மேலும் நமது சமமுதாயத்தை இன்னும் உறுதியாகக் கட்டி எழுப்பக் கூடியதும் கூட' என்கிறார்.

1 comments :

Anonymous ,  February 7, 2013 at 12:04 PM  

Darwins evolution reminds us gradual developments and changes,but this particular same sex marriage takes us back to before the stone age period.Developed countries new discovery.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com