ஆயுத விற்பனை முதல்முறையாக வீழ்ச்சி
தற்போது உலகின் முன்னணி 17 ஆயுத விற்பனை நிறுவனங்களும் அமெரிக்கா, ஐரோப்பாவை சேர்ந்தவையாக காணப்படுகிறது.இதில் அமெரிக்காவின் லொக்கித் மார்ஷல் குழுமம் ஆயுத விற்பனையில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதுடன். இந்நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் மட்டும் 36.3 பில்லியன் டொலருக்கு ஆயுதங்களை விற்றுள்ளதுடள் இதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவின் போயிங் குழுமமும், பிரிட்டனின் பி. ஏ. ஈ. சிஸ்டம் என்ற நிறுவனமும் உள்ளன.
சர்வதேச ஆயுத விற்பனை நிறுவனங்களின் வருமானத்தில் கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக வீழ்ச்சி கண்டுள்ளது. உலகிலுள்ள முன்னணி 100 ஆயுத விற்பனை நிறுவனங்களே இவ்வாறு வருமானத்தில் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. ஸ்டொக்ஹோம் அமைதிக்கான சர்வதேச ஆய்வு நிலையம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஆயுத விற்பனை நிறுவனங்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு மொத்தமாக பெற்ற வருமானத்திலேயே இந்த வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.
இதில் உலகின் 100 முன்னணி ஆயுத விற்பனை நிறுவனங்கள் 2011 ஆம் ஆண்டில் மொத்தம் 410 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. இது 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 வீத வீழ்ச்சியாகும். அத்துடன் 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆயுத நிறுவனங்கள் இவ்வாறு வீழ்ச்சியை எதிர்நோக்குவது இது முதல் முறை என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேற்படி அமைதிக்கான ஆய்வு நிலையம் 1989 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட ஆயுத விற்பனை தொடர்பான தரவுகளை தொகுத்தே இந்த முடிவை வெளியிட்டுள்ளது. எனினும் சீன ஆயுத நிறுவனங்களின் தரவுகள் கிடைக்காததால் அதன் விபரங்கள் இணைக்கப்படவில்லை.அமெரிக்காவின் ஈராக் யுத்தம் முடிவுக்கு வந்தது மற்றும் ஆப்கானில் இருந்து வெளிநாட்டு படையினர் முழுமையாக வெளியேற தயாராகி வருவது ஆயுத விற்பனை வீழ்ச்சிக்கான பிரதான காரணம் எனக் கூறப்படுகிறது.
இது தவிர லிபியாவுக்கான ஆயுத விநியோகத் தடை மோதல்களில் அமெரிக்காவின் தலையீடு குறை வடைந்தது உலகநாடுகளின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் இராணுவ செலவுகள் குறைக்கப்பட்டது போன்ற காரணிகளும் ஆயுத விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த தரவுகளில் பதியப்படாத சீன நிறுவனங்களே உலகின் இரண்டாவது ஆயுத விற்பனை வருமானத்தை பெறுகின்றன என கருதப்படுகிறது. இதில் மேற்படி முன்னணி 100 நிறுவனங்களில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை உலக ஆயுத சந்தையில் 60 வீதமான பங்கை பெற்றுள்ளது.
அத்துடன் உலகின் முன்னணி 17 ஆயுத விற்பனை நிறுவனங்களும் அமெரிக்கா, ஐரோப்பாவை சேர்ந்தவையாகும்.
இதில் அமெரிக்காவின் லொக்கித் மார்ஷல் குழுமம் ஆயுத விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் 36.3 பில்லியன் டொலருக்கு ஆயுதம் விற்றுள்ளது. இதற்கு அடுத்து அமெரிக்காவின் போயிங் குழுமமும், பிரிட்டனின் பி. ஏ. ஈ. சிஸ்டம் என்ற நிறுவனமும் உள்ளன.
0 comments :
Post a Comment