Wednesday, February 20, 2013

நாட்டுக்கு எதிரான தேசத்திரோகிகளின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளதாம். சாடுகின்றது ஐரின்.

ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு நெருங்கும் அதே நேரம் நாட்டுக்கு எதிரான தேச துரோக சக்திகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது என  சுயாதீனக் தொலைக்காட்சி சாடுகின்றது. சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் நேற்றைய செய்தியில்..

சில பிற்போக்கு அரசியல் சக்திகள் நாட்டிற்கு எதிரான சர்வதேச சக்திகளுடன் இணைந்து அரச சார்பற்ற அமைப்புக்கள் , புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாட்டுக்கு எதிராக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தாயகத்திற்கு எதிரான கருத்துக்களை மேலோங்கச் செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

தனி நபர்கள் மீது சேறுபூசும் சில இணையத்தளங்கள் நாட்டிற்கு எதிரான ஊடக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. லங்கா ஈ நியூஸ் எனும் இணையதளம் தாய் நாட்டிற்கு எதிரான துரோகத்தனமான ஊடக செயல்பாட்டிற்கு பாரிய பங்களிப்பை செலுத்தியுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சர்வதேச கருத்துக்களை கட்டியெழுப்பும் நடவடிக்கைகயை ஈ நியூஸ் பொறுப்பேற்றுள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தின் இறுதி சமரின் போது நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற பயங்கரவாதிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கம் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போதே இவர்கள் கொல்லப்பட்டனர். வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அவரது சகாக்களும்' அவரது புதல்வர் சால்ஸ் அண்டனியும் கொல்லப்பட்டார்.

இம்மோதல்களின் போது பிரபாகரனின் மற்றொரு புதல்வர் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டமை ஒரு இரகசியமல்ல, பிரபாகரனின் தற்கொலை குண்டுதாரிகளான கொலையாளிகள் நாடு முழுவதிலும் குண்டுகளை உடம்பில் கட்டிக் கொண்டு அப்பாவி மக்களை கொலை செய்து, கிராமங்களில் புகுந்து பச்சிளம் பாலகர்களை உறங்கி கிடந்த கட்டில்களில் கொல்லப்பட்டதையும் நடக்க முடியாமல் முடமாக கிடந்த வயோதிபர்களையும் கொலை செய்து சமயத்தலைவர்கள் உட்பட ஏராளமான தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள அரசியல் தலைவர்கள் போன்ற சகல தரப்பினரையும் வீதிகள் தோறும் படுகொலை செய்த போது அமைதியாக இருந்த, சர்வதேச மற்றும் உள்ளுர் என்.ஜி.ஓ கும்பல்கள் மற்றும் ஒரு சில ஊடகங்கள் இன்று தூக்கத்தில் நடப்பவர்களை போன்று நாட்டிற்கு எதிராக ஊடகம் என்ற ஆயுதங்களை ஏந்தியுள்ளன.

பிரபாகரனின் புதல்வர் தொடர்பாக கண்ணீர் வடிக்கும் ஈ நியூஸ் புகைப்படங்களை தயாரித்து சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான கருத்துக்களை கட்டியெழுப்பும் பெரும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஈ நியூஸ் பிரபாகரனினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி சிறார்கள் தொடர்பாக ஒரு வார்த்தையை கூட பேச மறுப்பதன் மர்மம் தான் என்ன? தனது தாயகத்திலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் வாழ்ந்து வரும் சந்தருவன், சோனதீர போன்ற தேசத்துரோகிககளால் நடத்தப்படும் ஈ நியூஸ் இணையத்தளம் தான் பிறந்த தாயகத்திற்கு எதிராக செயற்படுவது அதிசயப்பட வேண்டிய ஒரு விடயமும் அல்ல.

எல்ரிரிஈ டயஸ்போராவின் டொலர்களினால் வயிற்று பிழைப்பை மேற்கொண்டு இலங்கைக்கு எ திராக செயற்படும் ஈ நியூஸ்; இணையத்தளம் பொறுப்பேற்றுள்ளதை போன்று அவர்களது இரட்டை சகோதரர்களாக செயற்படும் கொசிப் இணையதளமும் உள்ளுரில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.

இவர்களது இலக்காக இருப்பது ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சர்வதேசத்தை தூண்டுவதாகும்.

தமிழ் கூட்டமைப்பின் சுமந்திரன், போன்றவர்களும் மக்களினால் முற்றாக நிராகிக்கப்பட்;டுள்ள விக்ரமபாகு கருணார்;ட்ன போன்றவர்களும் நாட்டிற்கு எதிராக செயற்படுவதற்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ள டயஸ்போராவின் பணத்தை கொண்டு வயிற்று பிழைப்பை மேற்கொள்ளும் பாக்கியசோதி சரவணமுத்து போன்றோரும் தாயகத்திற்கு எதிரான தேச துரோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையில் வாழ முடியாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ள சந்தருவன் சேனாதீரவும் ஈ நியூஸ் ஊடாக நாட்டிற்கு எதிரான ஊடக விபச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர் எனச் சாடியுள்ளது.


1 comments :

Anonymous ,  February 21, 2013 at 9:34 PM  

Christian missioneries and the followers always pray for their own country's strength,prosperity soveriegnity peace and order.It is really great,but it is shocking in some countries,the politicians and the followers blame each other,hit each other even they sell their own motherland for their own benefits.How you would judge this whether this as selfish minded behaviour or broad minded matter..?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com