விவசாயிகளை கடன் சுமையிலிருந்து பாதுகாக்க வாரீர்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களமைப்பு விவசாயிகளை கடன்சுமையிலிருந்து மீட்க வருமாறு அழைப்பு விடுக்கின்றது. இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்...
Our No – PACAA/AGRI/ RELIEF/2013-003
Date – 18.02.2013
தலைவர்,
செயலாளர்,
செயற்குழு அங்கத்தவர்கள்,
கமக்காரர் அமைப்புக்கள்,
வடக்கு மாகாணம்.
அன்புடையீர்!
எமது விவசாயிகளை கடன் சுமையிலிருந்து பாதுகாத்தல்.
மேற்படி எமது போரால் பாதிக்கப்பட்ட அமைப்பானது எமது சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றது. சமீபத்தில் வடபகுதி மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன் மீனவர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதற்கென 590 கிலோமீற்றர் பேரணி ஒன்றையும் நடத்தியுள்ளோம். எமது பாதயாத்திரை போராட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன் வடபகுதி மக்களை மட்டுமல்லாது உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எமது பாதயாத்திரை ஆரம்பித்தவுடன் இந்திய அரசும்இ பாதயாத்திரை முடிவடைந்த நிலையில் இலங்கை அரசும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. (பத்திரிகை செய்தி 17.02.2013ஐப் பார்க்கவும்) இந்நிலையில் பல்வேறு விவசாய அமைப்புக்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் நாம் செவிமடுக்கவேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்.
கடந்த 2012, 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட வரட்சியாலும், வெள்ளத்தாலும் எமது விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பெற்ற கடனையும், அடைவு வைத்த நகைகளையும் மீட்க முடியாத நிலையில் போரால் பாதிக்கப்பட்டு கடும் அழிவுகளை சந்தித்து எமது விவசாயிகள் வறுமையின் கோரப்பிடிக்குள் அகப்பட்டுள்ளார்கள். எனவே எமது விவசாயிகளை வறுமையிலிருந்து மீட்டு அவர்களை காப்பாற்ற வேண்டும். இதற்காக பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து எமது அமைப்பு போராட முடிவு செய்துள்ளது.
1. வட மாகாணத்தில் வரட்சியாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்.
2. வட மாகாண விவசாயிகள் விவசாயத்துக்கென பெற்றுள்ள சகல வங்கி கடன்களையும் இரத்துச்செய்ய வேண்டும்.
3. வட மாகாண மக்கள் உற்பத்தி செய்த நெல்லை அரசு நிர்ணயித்த விலைக்கே முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்.
எமது கோரிக்கைகள் ஜனாதிபதிக்கும்இ நிதியமைச்சருக்கும்இ விவசாய அமைச்ருக்கும்இ மத்திய வங்கிக்கும்இ சம்மந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுக்கும் முறைப்படி விவசாயிகள் சார்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளது. வட மாகாண விவசாயிகளினதும்இ விவசாய அமைப்புக்களினதும் ஆலோசனைப்படி எமது விவசாயிகளை பட்டினியிலிருந்து மீட்பதற்கான போராட்டம் ஒன்றும் நடைபெற உள்ளது.
எனவே, இது தொடர்பாக வட மாகாண விவசாய அமைப்புக்களுக்கான கூட்டம் மாவட்ட ரீதியில்;இ கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கான கூட்டம் 27.02.2013 அன்று கிளிநொச்சி மாவட்டத்திலும்இ முல்லைத்தீவு மாவட்ட விவசாய அமைப்புக்கான கூட்டம் 28.02.2013 அன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும், வவுனியா மாவட்ட விவசாய அமைப்புக்கான கூட்டம் 01.03.2013 அன்று வவுனியா மாவட்டத்திலும், யாழ்ப்பாண மாவட்ட விவசாய அமைப்புக்கான கூட்டம் 02.03.2013 அன்று யாழ்ப்பாண மாவட்டத்திலும், மன்னார் மாவட்ட விவசாய அமைப்புக்கான கூட்டம் 03.03.2013 அன்று மன்னார் மாவட்டத்திலும் நடைபெற உள்ளதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் இடம் நேரடியாக அனைத்து வடமாகாண விவசாய அமைப்புக்களுக்கும் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு தலைவர், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு, தொலைபேசி – 0779273042 உடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
உண்மையுள்ள
செயலாளர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு
0 comments :
Post a Comment