Wednesday, February 20, 2013

பிரேத பரிசோதனையின் போது உயிர் பெற்ற குழந்தை

பிறந்தவுடன் இறந்துவிட்டதாக வைத்தியர்களால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட குழந்தை உயிருடன் இந்த சம்பவம் நேற்று(19.02.2013)காலை
கனடாவில் நடைபெற்றுள்ளது. ரொறன்ரோவில் 20 வயது நிரம்பிய கர்ப்பிணித் தாய் ஒருவர் அவரது தாயாருடன் ஹம்பர்ரிவர் வைத்தியசாலைக்கு நடந்து சென்றவேளை அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது அந்தக் குழந்தையும் அவரது தாயாரும் ஹம்பர் றிவர் மருத்துவமனையின் வ்வின்ஸ் பிரிவுக்கு அம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டனர்.

வைத்தியசாலையில் அந்தக் குழந்தை உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாததால் அந்தக் குழந்தை இறந்துவிட்டது என மருத்துவர்க கூறிகுழந்தையை ஒரு துணியினால் மூடிவிட்டு குழற்தையை பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த வமயம் பாதுகாப்புக்காக இரண்டு பொலிசார் குழந்தை அருகில் காத்திருந்தசமயம் குழந்தையைப் போர்த்திய துணியில் அசைவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக காதுகாப்புக்கு இருந்த பொலிசார் குழந்தை மூடியிருந்த துணி அசைந்ததை பார்த்து துணியை எடுத்துப் பார்த்தபோது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து உடனடியாக குழந்தையை எடுத்து வைதியரிடம் கொடுத்துள்ளனர்.

தற்போது அந்தப் பெண்குழந்தையும் தாயாரும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாகத் தெரியவருவதுடன் வைத்திய சாலை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com