கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு கிடைக்கும் மிகப் பாரிய வருமானம் ஜிஹாத்திற்கு வழங்கப்படவில்லை-சட்டத்தரணி எம்.எம்.சுஹைர்
ஹலால் சான்றிதழை வழங்குவதன் மூலம் கிடைக்கும் மிகப் பாரிய வருமானம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு கிடைக்கின்றது. இது ஜிஹாத் இயக்கங்களுக்கு வழங்கப்படுகின்றன என தெரிவிக்கப்படுகின்றது. முற்றிலும் பொய்யாகும் என என சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தெரிவித்தார்.முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக் காலமாக பௌத்த தீவிரப் போக்குடைய அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஹலால் சான்றிதழை பெறுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வற்புறுத்தவில்லை. உற்பத்தியாளர்களின் வேண்டுகோளின் காரணமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் தொண்டர் அடிப்படையிலே ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவை இடம்பெறுகின்றது என்றார்..
0 comments :
Post a Comment