Sunday, February 3, 2013

வீடுதலை புலிகளை அழித்தது இலங்கை அரசு இல்லை அடித்துக்கூறுகிறார் சம்மந்தர்!

விடுதலைப்புலிகளை வேறு யாரும் அழிக்கவில்லை அவர்கள் தங்களது கெடுமதியால் தாங்களாகவேதான் அழிந்து கொண்டார்கள் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிவருகிறார். பாராளுமன்ற உரையிலும் அதனை முழங்கியதுடன் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலும் அதனை அழுத்திச் சொல்லியிருந்ததைக் காணமுடிந்தது.

இதை புலிகளின் முடிவு தெரிந்த அந்த நாளிலிருந்தே மெல்ல மெல்ல இவர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அழிவுக்கு வரும்வரை அவர்கள் பின்னால் இருந்து உசுப்பேற்றிக் கொண் டிருந்துவிட்டு, கடைசிநேரம் தங்களது போன்களை எல்லாம் மூடி வைத்துவிட்டுக் காணாமல் போனவர்களல்லவா! இன்றும் ஐந்தாம் கட்டப் போருக்குப் பரணி பாடிக்கொண்டிருக்கும் ஒரு தமிழரசுக் கட்சி எம்.பி., கடைசிவரைக்கும் பள்ளிக்கூடச் சிறுவர்களையெல்லாம் பிடித்துப் போர்க்களத்திற்குச் சாக அனுப்பிவிட்டு, தான் செஞ்சிலுவைச்சங்க வாகனத்தில் ஏறித்தப்பியோடி வந்தவரல்லவா!

கடந்த வருடம் ஜனவரி மாதம் தி ஐலண்ட் பத்திரிகைக்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் அளித்த செவ்வியிலும், இயக்கப் பெடியளைப் பற்றிக் கூறும் போது, வேலைவெட்டியற்ற, மடமைக் கோபம் கொண்ட, நிதான புத்தியற்ற... என்ற அடைமொழிகளையே பயன்படுத்தி அவர்களை இழிவுபடுத்தியிருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

விடுதலைப்புலிகளால் தாங்கள் நொந்துபட்ட வலிகளை இப்போது சொல்லி ஆற்றிக்கொள்கிறார்கள் என்று இதையெல்லாம் விட்டுவிடலாம்தான். ஆனால், அவர்கள் இருந்த வரையில், இந்தப் பதவிகளுக்காக அவர்களது வாசலில் இருந்த வாங்குக ளில் காவல் இருந்ததும், அவர்களையே ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு சர்வதேசத்திற்கு அறிவித்ததும், அவர்களையும் மக்களையும் அழிவுக்குத் தெரிந்தே தள்ளிவிட்டதையும் எப்படிப்பார்ப்பது?

இவர்களது அறுபது வருடகால பச்சையான சந்தர்ப்பவாத அரசியலின் தொடர்ச்சியல்லவா இது! புலிகள் மக்களை அழிவுக் குக் கொண்டுபோகிறார்கள் என்று தெரிந்துகொண்டும், மக்கள் மீதான எந்த அக்கறையோ பொறுப்புணர்வோ அற்று, அவர்கள் மூலம் பதவிகளைப் பிடிக்கும் அரசியலைத்தானே இவர்கள் செய்தார்கள்?

இன்றும் பெரும்பான்மையாக உள்ள அடிமட்ட தமிழ் மக்களின் வாழ்வு குறித்து எந்த அக்கறையுமற்ற, தீர்வு வரட்டும் பாப்பம் அரசியலைத்தானே செய்து பதவிகளைத் தக்கவைத்துக்கொள் கிறார்கள்! தனியே இவர்களிடம் பேசிப்பார்த்தால் தெரியும், தீர் வெங்கை வாறது? சிங்கள அரசாங்கம் ஒண்டையும் தராது என்றுதானே சொல்லிக்கொள்கிறார்கள்! இது சந்தர்ப்பவாத அரசி யல் மட்டும்தானா? நயவஞ்சகத்தன அரசியல் இல்லையா?

அதிகம் ஏன்? சர்வதேசம் நெருக்குதல் கொடுக்கும், ஜெனீவா மாநாட்டில் இலங்கையரசை மடக்குகிறோம் என்றெல்லாம் கடந்த வருட மாநாட்டிற்கு முன்னரும் பிலிம் காட்டிவிட்டு, கடைசியில் என்ன சொன்னார்கள்? ஜெனீவா மாநாட்டிற்கு கூட்டமைப்பினர் செல்கிறீர்களா என்று கேட்டபோது, அதை ஆவேசமான முறையில் மறுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். எவ்வாறான அழுத்தங்கள் தரப்பட்டாலும், நாட்டைக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளைக் கூட்டமைப்பு மேற்கொள்ளப்போவ தில்லை என்று கர்ஜித்துவிட்டு பம்மி விட்டார்கள்.

அவர்களுக்குத் தெரியும், சர்வதேசத்தினாலோ இந்த மாநாடுகளாலோ எல்லாம் தமிழ் மக்களுக்கான தீர்வு வரப்போவதில்லை யென்று. எனவே அங்கெல்லாம் போய் தங்களை கமிட் பண்ணிக் கொள்வதில்லை. சும்மா வெளிநாட்டு டூர் போய் வந்தோமா, தேர்தல் மேடையில் உங்கள் வாக்குப்பலத்தைக் காட்டுங்கள் சர்வதேசம் வந்திறங்கும் என்று உதார் விட்டு வாக்குகளை அள்ளினோமா என்று மேட்டுக்குடித்தளுக்கு அரசியலைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நம் மக்கள், இவர்களை வாய்பார்த்துக் காத்திருப்பதை விட்டால் தான் இனியிங்கு வாழ்வு!

1 comments :

Anonymous ,  February 3, 2013 at 9:55 PM  

Mr.Sam is trying divert the minds of the people to a " Zig Zag" situation with a view of gaining poltical benefits.He doesn't want to utter a correct believable and promising word on behalf of the tamils.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com