Thursday, February 7, 2013

அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிக் குழு உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறுகின்றது – அவுஸ்திரேலிய வானொலியில் சிறிதரன்.


அண்மையில் சிறிலங்கா சென்று திரும்பிய அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் உபதலைவரான Julie Bishop தலைமையிலான குழு சிறிலங்கா தொடர்பிலும் தமிழ்மக்கள் தொடர்பிலும் அவுஸ்திரேலியாவில் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மேல்பேணிலிருந்து இயங்கும் தமிழ்க்குரல் வானொலிக்கு 06.02.2013 அன்று அளித்த செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சிறிலங்காவிலிருந்து திரும்பியபின் Julie Bishop, Scott Morrison ஆகியோர் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு தமது சிறிலங்காவுக்கான பயணம் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். அவற்றில், தமிழ்மக்கள் சிறிலங்காவில் சுபீட்சமாக வாழ்கிறார்கள், அவர்கள் அரச அடக்குமுறையை எதிர்கொள்ளவில்லை, அமைதியாகவும் நிம்மதியாகவும் அவர்கள் அங்கே வாழ்க்கை நடாத்துகிறார்கள், அவுஸ்திரேலியாவுக்கு அகதியென்ற போர்வையில் வருபவர்கள் அனைவரும் சுகபோகமான ஆடம்பர வாழ்வுக்காகவே வருகிறார்களேயன்றி அவர்கள் உண்மையான அகதிகளல்லர் போன்ற கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களை தாம் சந்தித்துப் பேசியதாகவும், தமிழ்மக்கள் அங்கே அரச அடக்குமுறையை எதிர்கொள்கிறார்கள் என்று அவர்கள் தமக்குத் தெரிவிக்கவில்லையென்றும் மேற்படிக் குழு கருத்துத் தெரிவித்திருந்தது.

இக்கருத்துக்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள சிறிதரன் தான் இக்குழுவினருக்கு தமிழ்மக்களின் அவலங்களை விலாவாரியாகவும் ஆதாரபூர்வமாகவும் எடுத்தியம்பியதாகவும், தனது அலுவலகத்தில் நடந்த அடாவடியையும் தனது பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டு புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்படும் சம்பவங்களையும் விளக்கியதாகவும் கூறியிருந்தார்.

சிறிதரனின் தமிழ் வானொலிக்கு கருத்துரைத்தபின்னர் அவுஸ்திரேலிய வானொலி ஒன்று அக்குழுவில் இடம்பெற்ற Scott Morrison என்பவரை மீண்டும் பேட்டி கண்டபோது தமது அனுபவத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு இலங்கையில் எந்த பிரச்சினையும் இல்லை என திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.



1 comments :

Anonymous ,  February 7, 2013 at 10:23 PM  

Anne! Untha porukki kann teriyaatha pillayin ilam thayei evvalavukku keel tharamai/ porukkithanamai nasamakkinaan? Ethukkaka endral, anthe pennin kanavanai viduthalai sithu thaaren endru! Antha pennai ennamai naasamaruththu iruppan uvanin preethi pakaktrei parkkum pothu??? uvanai ellam vanni penkal teaneer kuduttu upasarikkirankale? armioda uvan irukkinan ilankai nettil! uvann ellam oru pm aaaa????? naai.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com