Thursday, February 7, 2013

இறந்த குழந்தைகளின் பெயர்களில் உளவு பார்க்கும் அதிகாரிகள்: ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் மீது குற்றச்சாட்டு

குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தருவதில் உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீசார், இறந்த குழந்தைகளின் அடையாளத்தை தங்கள் உளவு வேலைகளுக்கு திருட்டுத்தனமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு இறந்த குழந்தையின் அடையாளத்தில் உளவு பார்த்த ஒரு அதிகாரியை காதலித்த பெண்ணின் துயரக்கதையை, இங்கிலாந்தைச் சேர்ந்த கார்டியன் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது.

காதலித்த அந்த பெண்ணை உளவு அதிகாரி, தான் உளவு பார்த்த கூட்டத்திடமே விட்டு விட்டுச் சென்றிருக்கிறார். இதனால் அந்தப் பெண் பெரும் பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அதன்பின் தனது காதலனை கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது, அந்த அதிகாரி 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குழந்தையின் அடையாளத்தில் வாழ்ந்தது தெரிய வந்தது. இந்த செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இந்த முறையை எதிர்த்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இறந்த குழந்தைகளின் அடையாளத்தின் கீழ் உளவு பார்க்கும் உத்தி நீண்ட காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆயினும் இந்த முறை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்ல. இதுவரை 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இறந்த குழந்தைகளின் அடையாளத்தில் உளவு பார்த்ததும், சில நேரங்களில் அந்த குழந்தைகளின் பெயரிலேயே பாஸ் போர்ட் வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த முறை பின்பற்றப்பட்டால் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com