Thursday, February 28, 2013

கருணாநிதியால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது. த.பா.ஜ.கட்சியின் தலைவர் பொன் இராதாகிருஷ்ணன்.

இலங்கைக்கு எதிராக தமிழக அரசியல் வாதிகள் கிளர்ந்தெழுந்துள்ளதாக தமிழ் இணையதளங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்ற அதேநேரம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அடுத்த மாதம் சென்னையில தமிழீழ ஆதரவு மாநாடான டெசோ மாநாட்டை நடாத்தவுள்ளதாவும் பரப்புரைகள் மேற்கொள்ளப்டுகின்றன.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன், கருணாநிதி இதுபோன்ற ஆயிரம் மாநாடுகளை நடாத்தினாலும், அவரால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாது என, தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்துடன் இணைந்து, இலங்கைக்கு எதிராக கருணாநிதி செயற்பட்டதாகவும், அவர் குற்றம் சாட்டியுள்ளார். டெசோ மாநாடு நடாத்தும் கருணாநிதியின் முயற்சியை விமர்சித்துள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அன்று தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட கருணாநிதியின் இம்முயற்சி, போலி நாடகமென, வர்ணித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கருணாநிதி, ராஜிவ் காந்தியை கொலை செய்த பிரபாகரனை கைது செய்து, தண்டனை வழங்க வேண்டுமென தெரிவித்த ஜெயலலிதா, தற்போது பிரபாகரனின் இளைய மகனான பாலசந்திரன் தொடர்பாக முதலைக்கண்ணீர் வடிப்பதாக, தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், இலங்கைக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு மறுத்தமையினால், கோபமடைந்த தமிழ்நாடு எல்ரிரிஈ ஆதரவாளர்கள் சிலர், அவரது வீட்டை முற்றுகையிட முயன்றபோது, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை, குறிப்பிடத்தக்கதாகும். நெடுமாறன் மற்றும் சீமான் ஆகியோரிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் சிதம்பரம், இலங்கைக்கு எதிராக கருத்துகளை வெளியிடுவது அல்லது மறுப்பது, தனது உரிமை என, வலியுறுத்தியுள்ளார்.

ஐநா வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்தியா ஒருபோதும் இலங்கையின் எதிரியாக அவதாரம் எடுக்காது என, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com