Thursday, February 28, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் நான்கு பிரிவதற்கு தயார்- புதிய கட்சியும் பதிய ஏற்பாடு

நாங்கள் தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் தனியாகப் பிரிந்து செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டமைப்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி கொள்ள தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இவர்கள் பிரிந்து தாம் நால்வரும் இணைந்து தங்களை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவை மேற்கொள்ள அந்நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்த தீர்மானத்தை எடுக்க உத்தேசித்துள்ளன.

இருப்பினும், இதற்கான இறுதித் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ முக்கியஸ்தருமான வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

தனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவு செய்யலாமா என்பது தொடர்பாகவும் அது சாத்தியமானால் பதிவை மேற்கொள்வது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு கட்சிகளின் நடவடிக்கைகளை முன்னகர்த்திச் செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம்.

ஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியுடன் பேசி முடிவுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம்.
இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவு செய்வது என தீர்மானித்துள்ளோம்' என்றும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com