Friday, February 8, 2013

”இலங்கை கிரிக்கெட்"போட்டி ஒளிபரப்பு உரிமை யாருக்கு வழங்குவது சர்ச்சை நீடிக்கிறது!

எந்த விதமான கேள்விபத்திரங்களும் கோராது எதிர்வரும் 7 வருடங்களுக்கு இலங்கை கிரிக்கட்ட அணி பங்குபற்றும் அனைத்து போட்டிகளது ஒளிபரப்பு உரிமையை டென் ஸ்போர்ட்ஸ்(TEN SPORTS ) நிறுவனத்திற்கு வழங்குவதற்கு ”இலங்கை கிரிக்கெட்" கட்டுப்பாட்டு சபை எடுத்த முடிவுக்கு இலங்கை அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நிராகரித்துள்ளார்.

இலங்கை அணி பங்குபற்றும் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையையும் எதிர்வரும் 7 வருடங்களுக்கு டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்குமாறு ”இலங்கை கிரிக்கெட்" நிறுவனத் தலைவர் கோரிக்கை ஒள்றை சிளையாட்டு துறை அமைச்சருக்கு விடுத்திருந்தார். ஆயினும் முறையான கேள்விபத்திரம் கோரி இதனை சரியான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ”இலங்கை கிரிக்கெட்" அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com