Friday, February 8, 2013

ஜனாதிபதி மகிந்த இன்று இந்தியா சென்றார். பல இடங்களில் வெடித்தது போராட்டம், பலர் கைது- உருவப் பொம்மையும் எரிப்பு

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுடில்லி ஆகிய மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றதோடு பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.டில்லியிலுள்ள இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் சென்றுகொண்டிருந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அக்கட்சியின் ஆதரவாளர்கள் 100பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருப்பதி செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கறுப்புக்கொடி காண்பிக்கப் புறப்பட்ட ம.தி.மு.க. ஆதரவாளர்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமாக மு.கருணாநிதி தலைமையில் கறுப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


சென்னையில் இன்று காலை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் அவை வாயிலில் நின்றபடி ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.


ஜனாதிபதியின் விஜயத்தைக் கண்டித்து ஓசூரில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் சென்ற ரயிலை அவர்கள் மறிக்க முயன்றபோது பொலிஸார் அவர்களைத் தடுத்துள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டோர் பொலிஸாரைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 10பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்



.

3 comments :

Arya ,  February 8, 2013 at 11:42 AM  

சூர்யனை பார்த்து நாய் குறைத்தது போல் தான் உள்ளது இவர்களின் செயல் , இவர்களால் மகிந்தவை ஒன்றும் செய்ய முடியாது, மக்கள் அவரின் பக்கம் உள்ளார்கள்.

Anonymous ,  February 8, 2013 at 4:39 PM  

South India has many many problems including economical,social,welfare,
racial and poverty.We Sincerely ask some of the MOST OPPORTUNIST TAMIL NADU political leaders,why not you concentrate your minds in your own vital matters rather than talking about our Hon.President Mr MR.Please do arrange your house first rather than arranging other's house.In Holy Bible there is a golden saying "Before you take out the speck from other's eye,you should know that you have a log in your own eye".But one thing is certain that we know what is your political opportunism

Anonymous ,  February 9, 2013 at 10:41 AM  

Really money is so powerful it can do wonders.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com