Friday, February 15, 2013

கள்ள மட்டைகளுடன் இரு பிருத்தானிய தமிழர்களை மடக்கியது தாய்லாந்து பொலிஸ்!

பின்னணியில் நெடியவனா? வினாயகமா? விரைகின்றது இலங்கை புலனாய்வுத்துறை தாய்லாந்திற்கு.

தாய்லாந்தில் பிடிபட்டுள்ள தமிழ் கள்வர். 
கடந்தவாரம் தாய்லாந்து பட்டய பிரதேசத்தில் கள்ள கடனட்டைகளை கொண்டு மோசடிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு பிரித்தானிய தமிழர்களை தாய்லாந்து பொலிஸார் மடக்கியுள்ளனர். இவர்களிடமிருந்து 134 வெற்று கடன் அட்டைகள், கடனட்டை பாவனையாளர்களின் தகவல்கள், அத்தகவல்களை அட்டையினுள் தரவேற்றும் சாதனம், மடிக்கணனி, ஒருதொகை தாய்லாந்து மற்றும் பிறநாட்டு நாணயங்கள் உட்பட வேறு சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் பிரித்தானிய பிரஜா உரிமையைக் கொண்டுள்ள இலங்கையர்கள். இவர்களில் ஒருவர் பொலிகண்டியை சேர்ந்த 36 வயதுடைய தவராஜா ஞானராஜா, இரண்டாமவர் கிளிநொச்சியை சேர்ந்த 39 வயதுடைய நாராயணசாமி மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் பட்டய எனப்படுகின்ற இடத்திலுள்ள பீச் வீதியிலுள்ள ஏரிஎம் இல் பணத்தினை எடுத்துக்சென்றபோது அங்குள்ள பாதுகாப்பு கமராவில் காட்சி பதிவாகியதை தொடர்ந்து ஊசார் நிலையிலிருந்த பாங்கொக் வங்கி மோசடிக் கட்டுப்பாட்ட பிரிவினர் குறித்த இருவரும் பிறிதொரு ஏரிஎம் ல் பணம் எடுத்துக்கொண்டிருந்ததை பாதுகாப்புக் கமராக்களில் அவதானித்ததுடன் பொலிஸாருக்கு அறிவித்தனர். அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களை கையும் மெய்யுமாக பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை அவர்கள் தங்கியருந்த மைக் பீச் றிசோட்டின் 514ம் இலக்க அறைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு 134 வெற்று கடன் அட்டைகள், கடனட்டை பாவனையாளர்களின் தகவல்கள், அத்தகவல்களை அட்டையினுள் தரவேற்றும் சாதனம், மடிக்கணனி, 22200 (தாய் பாத்) உட்பட வேறு சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் கடனட்டை மோசடிகளை புலிகள் அமைப்பினரே நடாத்திவந்தனர் என்பது யாவரும் அறிந்தது. போராட்த்திற்கு பணம் தேவை என்ற காரணத்தாலேயே இவ்வாறான சட்டவிரோத விடயங்களை செய்கின்றோம் என புலிகளால் அப்போது நியாயம் கற்பிக்கப்பட்டமை யாவரும் அறிந்தது. ஆனால் இப்போது எந்தபோராட்டத்திற்கு இந்த மோசடி?

அத்துடன் இவர்கள் எந்த தரப்பினைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் தற்போது தெளிவில்லா விடயம். நோர்வே , பிரித்தானியா ஆகிய நாடுகளில் நெடியவனின் செயற்பாடுகள் வலுவாக உள்ள அதேநேரம் வினாயகத்தின் செயற்பாடு பிராண்சிலேயே உள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் பிராண்சிலுள்ள ஒரு முகவரின் உத்தரவின் பேரில் இச்செயற்பாட்டில் இறங்கியிருந்தாக தெரிவித்துள்ளதுடன் கைது செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் இருபது லட்சம் பாத் களை அனுப்பி வைத்துள்ளனர். எனவே இதன் பின்னணி வினாயகம் குழுவினர் உள்ளனர் என்ற முடிவுக்கு வரலாமா?
எது எவ்வாறாயினும் புலிகள் மீண்டும் தமது வியாபாரங்களில் தலை தூக்கிவிடக்கூடாது என்பதில் அக்கறையாகவுள்ள சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வலைப்பின்னலை கண்டுபிடிப்பதற்கு தாய்லாந்து விரைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.












1 comments :

Anonymous ,  February 16, 2013 at 7:12 AM  

இது தேவையா? இதுவரைக்கும் நாறியது போதாதா?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com