Monday, January 28, 2013

அமெரிக்காவில் ருத்ரகுமாரன் செயற்படும்போது இலங்கையில் பயங்கரவாதம் ஒழிந்தது என்று சொல்ல முடியாது. மஹிந்தர்.

2009 ஆம் ஆண்டு அமரிக்கா தூதுவராக பெற்றிசீயா பியுட்டினியஸ் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அவருடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமரிக்காவில் இருந்து விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் ருத்ரகுமாரன் செயற்பட்டுக் கொண்டிருப்பது பிரச்சினையான விடயம் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இவ் ஆட்சேபம் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திலிருந்து வாசிங்டனுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தாக விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ள செய்தியில், இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் சர்வதேசத்தில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு செயற்பட்டு வருகிறது.

நிதிச் சேகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அது ஒரு பிரச்சியாக இருக்கவில்லை.

எனினும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் ருத்ரகுமாரன் மற்றும் தமிழ் புலம்பெயர்வாளர்கள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதால் இன்னும் பயங்கரவாதம் தோற்கடிக்கபடவில்லை என்றே கருதுவதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் 2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு பின்னர் இலங்கைக்கு 3000 அரச சார்பற்ற நிறுவனங்கள் வந்தபோதும் அவற்றில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தினார்.

இதன்போது கருத்துரைத்த அமெரிக்க முன்னாள் தூதர் புட்டினஸ், இடம்பெயர்ந்தோர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பது இலங்கை- அமெரிக்க உறவை பாதிக்கும் என்று குறிப்பிட்டதாக வி;க்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com