Monday, January 28, 2013

தமிழ் தேசியம் குரைக்கும் நாய்களை விலத்தி நல்வாழ்வு நோக்கி ஓட முயற்சிசெய்யுங்கள்!

வாழ்க்கை எப்படிப் போகுது என்று கேட்டால் பலர் நாய் படாப் பாடுதான் என்று சொல்வதைக் கேட்கிறோம். அதென்ன நாய் படும் பாடு என்றறிய ஜாக் லண்டனின் கானகத்தின் குரல் அல்லது ஜெயகாந்தனின் கேவலம் ஒரு நாய் அல்லது வண்ணநிலவனின் மிருகம் சிறுகதையைப் படித்துப் பார்த்தால் தெரியும்.

அந்தக் கதைகளைப் படித்த எவருக்கும் நாய்களின் மீது அன்பு சுரக்காமல் போகாது. இந்த அன்பே அபரிமிதமாகி, நாயை நாய் என்று சொன்னாலே துடித்துப் போகிறவர்கள் இருக்கிறார்கள். செல்லப் பப்பு என்றோ கண்ணா என்றோ ஸ்வீட்டி என்றோ கொஞ்சும் காருண்ய உயிரன்பில் திளைப்பார்கள். ஆனால், நகர வாழ்க்கை ஒரு மனிதனை அப்படி அன்பின் வழியது உயிர்நிலை என விட்டுவைக்குமா எனச் சொல்ல முடியவில்லை.

வீதிக்கு வீதி குறுக்கும் மறுக்குமாக நடைபழகியபடியும், இரண்டு சக்கர வாகனப் பயணிகளுக்கெல்லாம் பயந்து உடனே எழும்பிவிட முடியாது என்ற அலட்சியத்தோடு படுத்த படியும் தெருக்களை நிறைத்திருக்கும் இன்றைய தெருநாய்களின் பெருக்கத்தைப் பார்க்கும்போது ஜீவகாருண்ய உணர்வைத் தக்கவைப்பது எவருக்கும் கடினமாகவே இருக்கும்.

வாயில்லா ஜீவன்களின் மீதான எங்கள் கருணையின் விளைவாக தெருநாய்கள் வகைதொகையில்லாமல் விளைந்து விளையாடித் திரிவதைக் காணமுடிகிறது. இவை நம் உடலில் வாய்வைத்தால் உண்டாகும் விளைவை எண்ணினால் இவற்றை வாயில்லா ஜீவன்களென எண்ணிப் பரிதாபப்பட முடியாமல் போகிறது.

நல்ல நாய் எது வெறிநோய் பிடித்த நாய் எது என்று வித்தியாசம் அறிய முடியாமல் பதற்றத்துடனேயே தெருவில் இவற்றைக் கடந்து செல்ல நேர்கிறது. ஏனெனில் இந்தத் தெருநாய்களுக்கு யாரும் வெறிநோய் ஊசி போட்டிருக்க முடியாது. அவ்வாறு ஊசி போடாத நாய்களுக்கு வெறிநோய்த் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. அந்த வெறிநோய்த் தொற்று மனிதருக்கு ஏற்பட்டுவிட்டால் அதோகதிதான். எனவே, தெருவில் திரியும் எந்த நாய் கடித்தாலும் உடனடியாக கடி வாங்கியவருக்கு வெறிநோய்த் தடுப்பூசி போட ஓடவேண்டும்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இதற்கு 23 ஊசிகள் போடப்படும். அதன் பின், 25 ஆண்டுகளுக்கு முன் நாய்க் கடிக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் 7 ஊசிகள் போட்டனர். இப்போது 3 ஊசிகள் மட்டும்தான்.

வெறி பிடித்த நாயின் கடி எச்சில் மூலம் வருவதுதான் வெறி நோய் (சுயடிநைள). வெறி நோயினால், அளவுக்கதிகமான மூளை வீக்கம் ஏற்படும். பின்னர் மூளையின் செயல்பாடுகளை மாற்றியமைத்து கண்டபடி வைரஸின் போக்கில் செயல்பட வைக்கும். நமது இயல்பு நிலை பறி போய்விடும்.
இந்த நாய்களைக் கொல்ல நம் காருண்ய உணர்வு விடா விட்டால், அவற்றுக்கு கருத்தடைச் சிகிச்சையையாவது செய்து விட வேண்டும். அதேசமயம், நடைபாதை உணவகங்களை சுத்தத்திற்கு நெறிப்படுத்தியும், உணவுக் கழிவுகள் தெருவில் கொட்டப்படாமல் பார்ப்பதன் மூலமும் தெருநாய்ப் பெருக்கத்தை ஓரளவு குறைக்கலாம்; குறைக்க வேண்டும்.

பிராணிகளைத் துன்புறுத்துவது தவறுதான். ஆனால், கட்டுப்பாடற்ற தெருநாய்ப் பெருக்கத்திற்குத் தீர்வுகாண வேண்டும். இல்லையென்றால், ஒவ்வொரு தெருவிலும் யாரோ ஒருவர் கல்லைப் பொறுக்கியபடி மிருகம் ஆகிக்கொண்டிருக்கும் படிதான் நேரும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com