Monday, January 21, 2013

மிருக வதையைத் தடுப்பதற்காக பச்சை குத்தும் போராட்டம்!!

பெக்கி ஃபோல்கார்ட் எனும் 34 வயதான பிரிட்டன் பெண்மணி லண்டனில் உள்ள பண மேலாண்மை கம்பனியில் வேலை செய்யும் வெற்றிகரமான மூத்த முகாமையாளர் ஆவார்.இதுமட்டுமன்றி இவர் சைவ உணவை மட்டுமே உண்ணும் மிருக வதை தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சமீபத்தில் தனது கொள்கையைப் பரப்புவதற்காக ஒரு முகமூடியை மாட்டிக் கொண்டு ஒரு வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதாவது லண்டனில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் திட்டமிட்ட படி இரு ஆடவர்களைக் கட்டிப் போட்டு விட்டு இவர் தயாரித்து வைத்திருந்த பச்சை குத்தும் இரும்புக் கருவி மூலம் அவர் மார்பில் அழிக்க முடியாதவாறு 269 எனும் இலக்கத்தை வலுக்கட்டாயமாக பொது மக்கள் முன் பதித்துள்ளார்.

10 நிமிடங்களுக்குத் தம்மைத் துன்புறுத்தி பொது மக்களுக்கு இவர்கள் சொல்ல விரும்பியது என்னவென்றால் பால் உற்பத்தி செய்யும் பாரிய பண்ணைகளில் வளர்க்கப் படும் விலங்குகள் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் (Leather) கொல்லப்படுவதைத் தடுப்பதாகும். இதற்காகவே இவ்வாறு கொல்லப்படும் ஆண் கன்றுக் குட்டிகளின் காதில் மாட்டப்படும் அடையாள எண் 269 ஐ இவர்கள் பச்சை குத்தியுள்ளனர்.

இந்த நூதனப் போராட்டம் முதன் முதலில் 2012 ஆக்டோபரில் இஸ்ரேலின் டெல் அவிவ்வில் மேற்கொள்ளப் பட்டது. தற்போது இப்போராட்டம் லீட்ஸ், வாஷிங்டன் டிசி, ஹம்புர்க், புயேனொஸ் ஐரேஸ்,மெல்போர்ன் மற்றும் ப்ரகுவே ஆகிய நகரங்களிலும் மேற்கொள்வது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.



1 comments :

Anonymous ,  January 21, 2013 at 12:07 PM  

We do repect the great lady Wicky Paulhard.She is really doing a holy service to the animals.She has the God's grace,holy humility and everything.As a Saint Thiruvalluvar once said who never kills and eats the meat will prayed as God.
How far below we are to the level of
Wicky Paulhard.She is great.I too join the animals pray for her godly efforts.Thank you Thank you Madam Wicky Paulhard.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com