Monday, January 21, 2013

ஐ.தே.கட்சியினுள் தலைவர் போட்டி முடிவடைந்து பிரதி தலைவர் நியமனத்தில் தோன்றுகின்றது முறுகல்.

ஐக்கிய தேசியக் கட்சியினுள் தற்போது வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளுக்கான தெரிவுகள் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் விசேட கூட்டம் இன்று நடைபெற்றால் பிரதி தலைவரை தெரிவு செய்யும் பணிகள் மேலும் தாமதமடையுமென சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் குறித்த 2 பதவிகளுக்கும் முன்னாள் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கட்சியின் பிரதி தலைவரும் செயற்குழுவினால் நியமிக்கப்பட வேண்டும். முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை போது முன்னாள் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச, கட்சி தலைவரின் அனுமதியோ அல்லது அங்கீகாரமோ இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். இது கட்சியின் ஒழுங்கு விதிகளையும் தலைமைத்துவத்தின் உத்தரவையும் மதிக்காத தன்னிச்சை போக்கான செயல் என ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பான கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் ஐக்கியத்தை பேணும் முயற்சியில் சஜித் பிரேமதாசவின் இத்தன்னிச்சை போக்கான செயற்பாடுகள் பெரும் தடையாக அமைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதே வேளை சஜித் பிரேமதாசவின் குறித்த செயல்பாடுகள் தொடர்பாக கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங், எதிர்கட்சி தலைவரின் செயலாளர் அப்துல் நவ்பல் ரஹ்மானிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளார். கட்சி தலைமையின் உத்தியோபூர்வ பதவி காலத்தை 6 வருடமாக நீடிப்பது தொடர்பான கட்சி யாப்பு திருத்தத்தின் போது சஜித் பிரேமதாச அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com