Saturday, January 12, 2013

ஊடகத்தை நம்பியதால் நடுத்தெருவில் வந்தவர்கள்!

பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களை உணர்ச்சிவயப்படுத்தி, யதார்த்தத்தை மறைத்து அவர்களைப் பொய்களின் மாயையில் ஏமாற்றி வைத்திருக்கும் பணியையே செய்துகொண்டிருக்கின்றன என்ற விமர்சனத்தில் உண்மை உண்டுதான்.

இந்த ஊடகங்கள், உள்ளீடற்ற எதிர்ப்பு அரசியலின் துணைக்கருவிகளாக இயங்குவதும், போலியான கொந்தளிப்புகள் மூலம் நம் சமூகத்தை மேலும் மேலும் பின்னடைய வைத்துக்கொண்டிருப்பதும் சமூக அக்கறையுள்ளவர்களால் கண்டிக்கப்பட வேண்டியதுதான்.

ஆனால், பத்திரிகைகளை எரிப்பதோ, ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுவதோ, தாக்குதல்களை நடத்துவதோ ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. தவறான கருத்துக்களாகவே இருந்தாலும் அவற்றை வன்முறைகளால் எதிர்கொள்ளும் அநாகரிகம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இங்கு 2009க்கு முற்பட்ட இரண்டரைதசாப்த காலத்தை அதன் சகல பரிமாணங்களோடும் மீளக்கொண்டுவர விரும்புபவர்களே இத்தகைய வன்செயல்களை அனுமதிப்பதும் ஆதரிப்பதுமான தவறுகளைப்புரிவர். வன்முறையின் குரூரத்தைப் போதுமானளவு அனுபவித்துவிட்டது இந்தச் சமூகம். மீள்வதற்கு உதவுவதே சமூகப் பொறுப்புணர்ந்தவர்களின் கடன்.

நாம் ஜனநாயக வழிமுறைகளுக்கும் மக்களின் அமைதியான செழிப்பான வாழ்வுக்குமே இந்த சூழலைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். ஊடகங்களின் மீது வன்முறை யைப் பிரயோகிப்பது எவ்வளவு தவறானதோ, அதேபோல ஊடகங்களிலும் வன்முறையைப் பொங்கவிட்டுக் கொண்டிருப்பதும் தவறானது என்பதை இந்தச் சமயத்திலேனும் நம்மவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஊடகங்களின் மூலம் வன்முறை உணர்வுகளைத் தூண்டி விடுபவர்கள் மற்றும் ஊடகங்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் இருதரப்பினரையும் நாம் கண்டித்து நிதானப்படுத்த வேண்டும். இன்னும் முழுமையான அமைதிச் சூழல் இங்கு வந்துவிடவில்லை என்று சிலருக்கு அபிப்பிராயம் இருக்கலாம். ஆனால், அந்த அமைதிச் சூழலை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்கியே நம் செயற்பாடுகள் அனைத்தும் இருக்க வேண்டுமென்பதை நாம் மறுத்துவிடக் கூடாது.

வன்முறையைத் தூண்டிவிடுவதும், அந்த ஆவேசத்தில் அவிந்துபோகத் தயாராயிருப்பவர்களை உருவாக்குவதும் மிக இலகுவான காரியங்களே. ஆனால், சாமானிய வாழ்வைக் காப்பாற்றிக் கொள்வதற்கே அதிக பிரயாசை வேண்டியிருக்கிறது. அதற்காகவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு விவேகமுடன் செயற்பட்டாக வேண்டும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு சிறுவனிடம் கேட்டதாக ஒரு கதை உண்டு. உனக்கு ஒருவன் அடித்துவிட்டால், பதி லுக்கு அவன் முகத்தில் ஓங்கிக் குத்து விடுவதா அல்லது கைகளிரண்டையும் காற்சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு உன் கோபம் ஆறும்வரை பொறுத்திருக்க முயலுவதா சிரமமா னது என்று அவர் கேட்கிறார்.

குத்தி அவன் மூஞ்சையை உடைக்காமல் கைகளைக் காற் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு பேசாமல் நிற்பது தான் சிரமமானது என்கிறான் சிறுவன்.

ஒருவர் செய்யச் சுலபமானதைச் செய்வதா வீரம் அல்லது சிரமமான விஷயத்தைச் செய்வதா வீரம் என்று சிறுவனைக் கேட்கிறார் ராமகிருஷ்ணர். நீ திருப்பி அடிக்காமல் விடும்போது சண்டை தொடர்வது நிறுத்தப்படுகிறது புரிந்துகொள்கிறாயா? சிறுவனுக்குப் புரிகிறது. நமக்கும் புரிய வேண்டும்.
பகைமறப்பே நல்லிணக்கத்துக்கும் பின்னர் நல்வாழ்வுக் குமான வாசல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.ருக்க

1 comments :

Anonymous ,  January 12, 2013 at 9:32 PM  

Freedom of press had a great value,many many years ago.We received the true facts in the news papers and in other news medias.
Now in these days they give you some delicious news,action packed news items such as rapes,violent acts,killings and abductions.In order to please the fans.They knew the taste of their fans,politically the fans being illusioned by the present false dramatic news items.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com