Sunday, January 13, 2013

குழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்க்க வேண்டுமா? இத படிங்க…

போட்டி நிறைந்த மற்றும் எந்நிலையிலும் ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ள இந்த உலகத்தில், குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாமல் கவலையில் நிறைந்துள்ளனர். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக, அவர்களின் உண்மையான வெற்றிக்கு தேவையான நம்பிக்கையை கொடுக்க நினைவில் கொள்ள வேண்டும்.

ஏனெனில் சரியான தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் குழந்தைகளால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க எளிய தினசரி பாடங்களின் மூலம் மேம்படுத்த முடியும்.

இப்போது குழந்தைகளின் மனதில் எப்படி தன்னம்பிக்கையை வளர்ப்பது என்று பார்ப்போமா!!!

தன்னம்பிக்கையை வளர்க்கும் வழிகள்…

1. பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளின் முன் தாங்கள் முடிவெடுக்கும் திறன் மற்றும் சமுதாயத்தின் பங்களிப்பு மூலமாக உங்கள் தன்னம்பிக்கையை நிரூபிக்க முடியும். குறிப்பாக குழந்தை முன், உங்களை தாழ்த்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பிரச்சனைகளில் இருந்து விலகி செல்வதற்கு மாறாக, அவற்றை ஒரு மரியாதையான முறையில் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு தன்முனைப்பை உங்களிடம் இருந்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும்

2. குழந்தையின் பல்வேறு நடவடிக்கைகளில் திருப்தியை வெளிப்படுத்துங்கள். அதிலும் குழந்தையின் திறமை அல்லது திறனை புகழ்வதற்கு பதிலாக, அவர்களது நடவடிக்கைகள் நினைத்து பெருமை அடைந்திருப்பதை வெளிப்படுத்துங்கள். “நீ மிகவும் புத்திசாலி” என்று சொல்வதை விட “நீ பள்ளியில் கடினமாக வேலை செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்று சொல்லலாம்.

3. குழந்தைகளது கலைத்திறன் படைப்புகள் அல்லது வெற்றிகரமாக முடித்த பள்ளி திட்டங்களை வீட்டில் காட்சிக்கு வைப்பதால், அவர்களது பணியின் மதிப்பை காண்பிக்கலாம். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அவர்களின் நேர்மறையான சாதனைகளை பகிர்ந்து கொள்வதின் மூலம் அவர்களுக்கு ஒரு புகழ்ச்சி கிடைக்கும். அவர்களின் சாதனைகளை ஒரு நினைவக புத்தகம் அல்லது பத்திரிக்கையில் பதிவு செய்து பிற்காலத்தில் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

4 பெற்றோர்கள் திறந்த மனதுடன் குழந்தையின் கவலைகளை கேட்க வேண்டும். குழந்தைகள் சிறிய கவலைகளினால் தன்னை ஒரு வேடிக்கையாக உணர்வதை தவிர்க்கவும். சில நேரங்களில் அவர்கள் கவலையடைவதை நியாயப்படுத்த திறந்த மனதோடு பேசுமாறு உற்சாகப்படுத்தவும்.

5. மூளையை குழப்பும் யோசனைகள் நிறைந்த வேலைகளை குழந்தையுடன் சேர்ந்து செய்யுங்கள். அது சூழ்நிலைகளை மாற்றுவதோடு, அவர்களை கவலையில் இருந்து விடுதலை அளிக்கும். அவர்கள் போர் அல்லது பஞ்சம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பற்றி கவலைப்பட்டால், இந்த பிரச்சினைகள் தனிப்பட்ட முறையில் அவர்களை எப்படி பாதிக்கும் என்று அவர்களோடு கலந்துறையாடி அதில் அவர்கள் எவ்வாறு தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.

6. குழந்தைக்கு ஒரு வலுவான தலைவராக உங்கள் பங்கை நிறைவேற்றுங்கள். பெற்றோர்கள் பயம் மற்றும் சந்தேகம் அடைவதை, குழந்தைகள் முன்பு தணிக்கை செய்யுங்கள்.

வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com