Sunday, January 13, 2013

ரிஸானாவை வெளிநாட்டுக்கு அனுப்பியவர்களுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டுமாம் - சொல்கிறார் அம்ஜத்

ரிஸானாவை மிகக் குறைந்த வயதில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்பிய வஞ்சகர்களுக்கு எதிராக மரண தண்டனை வழங்க வேண்டுமென்று தான் கேட்டுக்கொள்வதாக மேல் மாகாண சபை உறுப்பினர் எம். எம். எம். அம்ஜத் குறிப்பிடுகிறார்.

இது தொடர்பாக அம்ஜத் வழங்கியுள்ள அறிக்கையில்,

‘இலங்கையில் ரிஸானா நபீக் சிறுமிக்கு ஸவூதி அரசு வழங்கியுள்ள மரண தண்டனை விடயத்தில் முழு உலகும் கவலைகொண்டுள்ளது. இது வழங்கப்படக்கூடாதொரு தண்டனை. இலங்கையின் அரசுத் தலைவர் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமைகள் ஆணைக்குழு பலவும் இந்த மரண தண்டனயை நீக்குமாறு பலமாகக் கேட்டுநின்ற போதும், ஸவூதி அரசாங்கம் அவற்றில் எதனையும் கருத்திற் கொள்ளாது வழங்கிய இந்த மரண தண்டனையை நீதிக்கு அடிபணிகின்ற இயல்புரீதியான எந்த ஒரு மனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

எது எவ்வாறாயினும் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அரசு என்ற முறையில் இப்போது செய்யவேண்டியது என்னவென்றால், சிறுமி ரிஸானாவை போலி ஆவணங்கள் தயாரித்து சிறுவயதில் வெளிநாட்டுக்கு அனுப்பிய நயவஞ்சக முகவர்களுக்கும் மரண தண்டனை விதிப்பதாகும். அவ்வாறு செய்யத் தவறினால், இவ்வாறான பயங்கர விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ரிஸானாக்கள் இந்நாட்டிலிருந்து மென்மேலும் உயிர்ப்பிக்கப்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது போகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


(கலைமகன் பைரூஸ்)

1 comments :

Guna ,  January 14, 2013 at 9:32 AM  

பைரூஸ் உங்களின் கருத்து 100 வீதம் சரியானது. எல்லாத்துக்கும் முதல் ரிசானாவின் அப்பனுக்கு நல்ல தண்டனை கொடுக்க வேன்டும். ஏன் அந்த பொட்டயனுக்கு குடும்பம் கஸ்டத்தில் இருந்தால் அந்த சின்ன பெண் பிள்ளையை அனுப்பாமல் அவன் வெளிநாடு பேயிருக்கலாம். இல்லாவிட்டால் பிச்சையெடுத்து குடும்பத்தை காப்பாற்றியிருக்கலாம். அதை செய்யாமல் அந்ந முதுகெலும்பில்லாத பொட்டையன் வீட்டில் இருந்தால் சரிவருமா?

அந்த அப்பாவி ரிசானானை வெளிநாட்டுக்கு அனுப்பி கொன்றுவிட்டு இப்ப அனுதாபம் தேட முயற்சிக்கிறான் பொட்டையன். அது மட்டுமில்லாமல் சவுதி காரனுகள் கொடுக்கும் பீயை தின்ன முயற்சிக்கின்றான். இவனுளை போல பொட்டையனுகளால் தான் மனைவிமாரும் பிள்ளைகளும் சீரழிகின்றனர். அவ்வாறு மனைவிமாரையும் பிள்ளைகளையும் வெளிநாட்டு அனுப்பிவிட்டு வீட்டில் இருந்து ஓசி சோறு தின்னும் பொட்டையனுகளுக்கு ரிசானாவின் மரணம் ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும்.


அதே போல் வெட்கம் கெட்ட அமைச்சர் ஒருவர் சவுதிமுட்டாளின் பிச்சையை வாங்கி அந்த குடும்பத்திற்கு கொடுத்து நல்ல பெயர் வாங்க முயற்கிக்கின்றான் இதை போல ஒரு கேவலமான நிலை யாருக்கும் வரக்கூடாது. சவுதியில் அந்த அப்பாவி பெண்ணை கொலை செய்து விட்டு சவுதி முட்டடுளுகள் கொடுக்கும் காசை அந்ந வெட்கம் கெட்ட அமைச்சர் வாங்குகிறான். மக்களின் வோட்டை வாங்கி வந்ந வக்கிலாத முஸ்லிம் அமைச்சர்கள் சவுதிக் காரனின் பீயை தின்னாமல் அவனுகள் அவனுகளில் சொந்ந காசில் அந்த குடும்பத்திற்கு உதவி செய்தால் இலங்கைக்கும் கௌரவமாக இருக்கும். வெட்கம் கெட்டவனுகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com