Sunday, December 30, 2012

மண்டை தீவு சிறுமி வன்புணர்வின் பின் கொலை -ச.வை.அதிகாரி!

மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதி கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நான்கு வயதுச் சிறுமி வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் குறிப்பிட்டார்.

இந்த சிறுமி முதல் நாள் ஒரு மணிக்குப் பின்னர் வீட்டில் இருந்து காணாமற் போய் பெற்றோர் தேடியும் கிடைக்காதவர் அடுத்தநாள் காலை அவரது வீட்டுக்கு 200 மீற்றர் தூரத்தில் உள்ள புகையிலைத் தோட்டக் கிணறு ஒன்றை இறைப்பதற்காக சென்றவர்கள் அந்தக் கிணற்றுக்குள் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததை தொடர்ந்து அடுத்து பொலிசார் சடலத்தை மீட்டபோதே இவர் காணமானற்போன தமது பிள்ளை என பெற்றோர் இனம் காட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று வைத்தி பரிசோதனையை மேற்கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் அங்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன் முதற்கட்ட உடற்கூற்றுப் பரிசோதனையையும் மேற்கொண்ட போதே இந்த சிறுமி வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இந்தசம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுக்காணப்படுகிறது.

இது தொடர்பான் மேலதிக விசாரணைகளை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்துறை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com