Sunday, December 16, 2012

வானத்திலிருந்து வீட்டுத் தோட்டத்தில் வீழ்ந்த மர்மப் பொருள்

மீகஹவுல பிரதேசத்திலும் வீட்டுத் தோட்டமொன்றில் மர்மப்பொருள் விழுந்துள்ளது. சுமார் ஒருகிலோ கிராம் நிறைகொண்ட இந்த மர்மப்பொருள் மினுமினுக்கும் தன்மையை கொண்டிருக்கின்றது. கடந்த சனிக்கிழமை இரவு வேளையிலேயே இவ்வாறான மர்மப்பொருள் வானத்திலிருந்து விழுந்துள்ளதாகவும் கறுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் மினுமினுக்கும் தன்மை கொண்ட இந்த மர்மப்பொருள் ஆமை போன்ற உருவத்தை ஒத்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வானத்திலிருந்து விழும் பொருட்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவுறுத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com