மழை நீரோடு வந்த அரவம் தீண்டி பெண் படுகாயம்
மழை நீரோடு மிதந்து வந்த பாம்பு கடித்ததில் படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த கி.கனிதா (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.
அராலிப் பகுதியில் நேற்று கடும் மழை பெய்தது. இதன்போது மழைநீர் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது.மழைநீரோடு பாம்புகளும் வெளியே உலாவந்துள்ளனர்.
இதன்போது வாசலிலுள்ள கதவை திறந்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே செல்ல முற்பட்ட போதே பாம்பு இவரை தீண்டியுள்ளது என்த தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மேற்படி பெண் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment