அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம்: ஒபாமா, ரோம்னி இறுதிகட்ட விவாதம் இன்று நடக்கிறது
அமெரிக்கா அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஒபாமாவும், அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் தங்களது திட்டங்கள் பற்றி நேரடியாக 3 கட்டமாக விவாதிக்க வேண்டும்.
அதன்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் களத்தில் உள்ள ஒபாமாவும், மிட்ரோம்னியும் இதுவரை 2 கட்டமாக ஒரே மேடையில் தோன்றி தங்களது வளர்ச்சி திட்டங்கள் பற்றி அறிவித்து உள்ளனர். இதுவரை நடந்த 2 கட்ட விவாதத்தில் இருவரும் நடத்திய விவாதம் பற்றிய நடந்த கருத்துக்கணிப்பில் முதலில் மிட் ரோம்னியும், 2-வது கட்ட விவாதத்தில் ஒபாமாவும் உள்ளனர்.
ஒபாமா, மிட்ரோம்னி ஆகியோர் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 3-வது கட்ட நேரடி விவாதத்தில் பங்கேற்கிறார்கள். இந்த இறுதிகட்ட விவாதத்தில் அவர்கள் தங்களது வெளிநாட்டு கொள்கை மற்றும் அவுட்சோர்சிங் பணி (அயல்நாடு பணி) போன்ற முக்கியமான விவாதத்தில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக அவர்கள் தங்களது வெளிநாட்டு கொள்கைகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர். இந்த விவாதம் அமெரிக்கர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகையே எதிர்பார்க்க வைத்து உள்ளது.

0 comments :
Post a Comment