Monday, October 22, 2012

நீதித்துறைக்கும் நிறைவேற்றதிகாரத்துக்கும் இடையிலான பிரச்சினைகளை தீர்க்க தயாராம்.

நீதித்துறைக்கும் நிறைவேற்றதிகாரத் துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி விவாதித்து தீர்வு காண்பதற்கு உதவுவதற்குத் தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிமரசிங்க நேற்று கொழும்பில் நடைபெற்ற தேசிய சடத்தரணிகள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகெண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார். தான் ஏற்கனவே சமர்ப்பித்திருந்த சார்க் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகளையும் உள்ளடக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு அரசு இணங்காவிடில அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தான் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

ஒரு குழுவை அமைப்பதற்கான அவரின் கருத்தை வரவேற்பதாகவும் ஆனால் அதில் உள்ளடங்குபவர்கள் பற்றிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஸ்ரீலசுக பொதுச் செயலாளர் ஏற்கனவே கூறியிருந்தார்.

நீதித்துறை மற்றும் சட்டத்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய ஒரு பாராளு மயன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்தார்.

நிறைவேற்றுத் துறையின் தலையீடு பொலிஸ் மற்றும் நீதித்துறையில் இருக்கும் போது நீதிச் சேவை ஆணைக்குழுவின செயலாளர் மீதான தாக்குதலை நியாயபூர்வமாக விசாரிக்க மடியாது என்று சிரேட்ட சட்டத்தரணி ஐதேக துணைத் தலைவர் லக்ஸமன் கிரியெல்ல கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com