Tuesday, September 4, 2012

தமிழகம் செல்லும் இலங்கையர்களுக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை பயண எச்சரிக்கை

தமிழ் நாட்டுக்கு பயணம் செய்யும் இலங்கையர்கள் சமீபகாலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதனால், தமிழகத்திற்கான பயணத்தை தவிர்க்குமாறு வெளி விவகார அமைச்சு இலங்கை பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகம் செல்லுகின்ற இலங்கை பிரஜைகளுக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும், தமிழ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கையர்கள் சமீபகாலமாக பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர் எனவும், எனவே இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே இப்பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவில் ஏனைய மாநிலங்களுக்கு செல்வதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சமீப காலங்களில் தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை சுற்றுலா பயணிகள், யாத்திரிகர்கள், விளையாட்டு, கலாசார துறைசார்ந்தோர் மற்றும் தொழில் முறை பயிற்சிக்காக செல்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதனால், இந்த விடயத்தில் இலங்கை பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கேட்டுகொண்டுள்ளது.

இதேவேளை இலங்கையைச் சேர்ந்த 184 யாத்திரிகர்கள் தஞ்சாவூர் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் எனவும், அன்னை வேளாங்கன்னி தேவாலயத்திற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த குழுவொன்றுக்கு தமிழகத்தில் உள்ள குழுவென்று கத்திகள் மற்றும் தடிகளுடன் விரைந்து உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், உடனடியாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக மத்திய அரசுக்கு தகவல் வழங்கப்பட்டதாக பதில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இந்திய மத்திய அரசு குறித்த இலங்கையர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதனையடுத்து ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இன்று விசேட விமானமொன்றை தமிழகத்திற்கு அனுப்பி அவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாகவும் பதில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1 comments :

ஆர்யா ,  September 5, 2012 at 7:08 AM  

தமிழ்நாட்டில் உள்ளதுகள் காட்டு மிராண்டிகள் , ஏன் அங்கே போகவேண்டும் , இந்தியாவில் போக பல நல்ல இடங்கள் உள்ளது. தனிமைப்பட போவது இலங்கை அல்ல , தமிழ் நாடு தான், ஏற்கனவே பக்கத்துக்கு மாநிலத்தருக்கு இந்த காடு மிரண்டிகளை பிடிக்காது , அதாலே இதுகளுக்கு தண்ணி கூட கிடைப்பதில்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com