இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Tuesday, August 14, 2012

முல்லைத்தீவில் மேலும் 380 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன.

மெனிக்பாம் நிவாரண முகாமில் தங்கியிருந்த மேலும் 380  குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு கட்டங்களாக மீளகுடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் குணரட்ன வீரகோன் தெரிவிக்கின்றார். இதனடிப்படையில் 206 குடும்பங்களை சேர்ந்த 635 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் மீள குடியமர்த்தப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு குழுவினர் மல்லிகைதீவு பிரதேசத்திலும் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இப்பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்தே மீள்குடியேற்ற பணிகள் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவிக்கின்றார். இம் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் 23 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com