ஹோமியோபதி வைத்திய பட்டப்படிப்பை மேற்கொள்ள 15 லட்சம் ரூபா புலமைப் பரிசில்
ஹோமியோபதி வைத்திய பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு, மேலும் பலருக்கு அரசாங்கம் புலமைப் பரிசில் வழங்கவுள்ளதாகவும், சுதேச வைத்தி யத்துறை அமைச்சும், இந்தியாவின் கொல்கட்டா பல்கலைக்கழகமும் இணைந்து செயற்படுத்தும் இத்திட்டத்தின் கீழ், புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச விமான பயணச்சீட்டு, மற்றும் புலமைப் பரிசில் தொடர்பான ஆவணங்கள் வழங்கும் வைபவம், சுதேச வைத்தியத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் சாலிந்த திசாநாயக தலைமையில இடம்பெற்றது.
இக்கற்கை நெறி ஐந்தரை வருடங்களை கொண்டது எனவும், ஒவ்வொரு புலமைப் பரிசிலும் 15 லட்சம் ரூபா பெறுமதியை கொண்டது எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
0 comments :
Post a Comment