சன்மானமும் விசேட சலுகைகளும் வழங்கப்படும் - பொலிஸ் மா அதிபர்
குற்றச் செயல்களை தடுப்பதில் பொலிஸ் அதிகாரிகள் மட்டுமல்லாமல் பொது மக்களையும் ஊக்கப்படுத்து வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட் டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோன் தெரிவித்தார். பொலிஸ் திணைக்களத்தில் திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகளை ஊக்குவிக்கும் நோக்கில் பொலிஸ் நிதியத்தின் மூலம் மாவட்டம் தோறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
குற்றத்தடுப்பு, ஆயுதங்கள், புலனாய்வு தகவல் போன்றவற்றில் திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகள் இவ்வாறு சன்மானம் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர் எனவும், இவ்வாறு திறமை காட்டியவர்களுக்கு பதவி உயரும் போது விசேட சலுகை வழங்கபடுவதாகவும், நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களை தடுப்பதில் பங்களிப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு சன்மானம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்ககோன் இவ்வாறு தெரிவித்தார்.
குற்றச் செயல்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்கியோர் இவ்வைபவத்தில் கௌரவிக்கப்பட்டனர். பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நரவரட்ன உள்ளிடட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment