Friday, July 6, 2012

காலி பிரதி பொலிஸ் மா அதிபர் பணிநீக்கம்

காலி பிரதி பொலிஸ் மா அதிபர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனின் உத்தரவுக்கு இணங்க பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காலி பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறி மீது 2007ம் ஆண்டு மாத்தளை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய போது, பாதுகாப்பு ஊழியர்கள் நால்வர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோரை கடமை நேரத்தில் தனிப்பட்ட வேலைக்காக அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஒழிப்புத் திணைக்களத்தினர் பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறி மீது வழக்குத் தொடத்தனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இலஞ்சக் குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதால், ஒழுக்காற்று அடிப்படையில் காலி பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com