ஜெனிவா செப்டெம்பர் கூட்டத்தை மையப்படுத்தி ஆட்களை கடத்துகின்றார்கள் – கெகலிய ரம்புக்வெல
ஜெனிவாவில் செப்டெம்பரில் இடம் பெறும் அடுத்த மனித உரிமை (UNHRC) கூட்டத்தொடரை இலக்கு வைத்து, புகலிடக்கார குழுக்கள் அல்லது அக்கறையுள்ள தரப்பினரால் சட்ட விரோதமாக இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கான ஆட்கடத் தல்கள் நடாத்தப்படுகின்றன என்று அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஊடாக மக்களைத் தெளிவுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்படுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டவிரோதமான ஆட்கடத்தல்கள் தொடர்பில், சட்டத்தில் தேவையான மாற்றங்கள் செய்வதற்கு சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெறுவதாகவும், முப்படையின் உதவியுடன் மனிதக் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும், எல்.ரி.ரி.ஈ மீதான தடையை நீடித்துக்கொண்டு ஆரம்பத்திலிருந்தே இந்தியா இலங்கைக்கு போதுமான ஆதரவு வழங்கி வருகிதென்றும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும், 1500 க்கு மேற்பட்ட இலங்கை ஆயுதப்படையினர் ஆண்டு தோறும் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாகவும் தமிழ் நாட்டிலுள்ள ஒருசில அரசியல்வாதிகளே இதை எதிர்ப்பதாவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment