Thursday, July 26, 2012

2008 க்குப் பின் அவுத்திரேலியா திருப்பி அனுப்பிய முதலாவது தமிழர் தயான் அந்தனி.

அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 30 வயது தயான் அந்தனி இன்று வியாழக்கிழமை அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் இரகசிய பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர் நாடு கடத்தப்பட்டால் இலங்கையில் கொல்லப்படுவார் என்ற பயத்தின் காரணமாக நாடுகடத்தப்படுவதற்கு எதிராக அவுத்திரேலிய அகதிகளின் சட்டத்தரணிகள் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியுற்ற நிலையில் இவர் மெல்பேர்ன் மெரிபிர்னோங் தடுப்பு முகாமில் இருந்து, மெல்பேர்னுக்கு அருகிலுள்ள டுல்லாமரைன் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படுவதற்காக  பேங்கொக் செல்லும் விமானமொன்றில் அவுஸ்திரேலிய நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 2.35 மணியளவில் ஏற்றப்பட்டார்.

2008 ம் ஆண்டுக்குப் பிறகு அவுத்திரேலியாவிலிந்து திருப்பி அனுப்பப்படும் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட முதலாவது தமிழர் இவராவார்.

என்ன நாடு இது. அவர் இலங்கைகுச் சென்றால் அவர்கள் அவரைக் கொல்வார்கள். அவரை என்னிடம் தாருங்கள் நான் கவனித்தக் கொள்கிறேன் என்று அவரது சகோதரி கண்ணீர் மல்கக் கூறியது அதிகாரிகளின் காதில் ஏறவில்லை. உளநோயால் பாதிக்கப்பட்ட அவர் 2010 ல் விமான மூலம் அவுத்திரேலியாவுக்கு வந்த்தாக அவரது சகோதரி கூறினார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com