Thursday, July 26, 2012

நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும், புலனாய்வாளர்கள் கொல்லப்படுவார்கள்- அல்-காய்தா பயங்கரவாதிகள்

நீதிபதிகள், அரசு வக்கீல்கள் மற்றும், புலனாய்வாளர்கள் அடுத்த சில தினங்களில் நாடெங்கிலும் கொல்லப் படுவார்கள் என்று அல்-காய்தாவின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, உலகெங்கும் உள்ள முஸ்லீம் கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒலிப்பதிவு செய்தி, அபு பக்கர் அல்-பக்தாதியின் குரலில் வெளியாகியுள்ளது. இவர், கடந்த மே 2010 முதல் ஈராக் அல்-காய்தா அமைப்பின் தலைவராக செயல்படுகிறார். ஈராக்கில் அல்-காய்தா அமைப்பு ஐ.எஸ்.ஐ. என்ற பெயரில் செயல்படுகிறது.

அபு பக்கர் அல்-பக்தாதி, கடந்த மே, 2010-ல் அமெரிக்க ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், அப்போதைய ஐ.எஸ்.ஐ. தலைவர் அபு ஓமர் அல்-பக்தாதி கொல்லப்பட்டபின் தலைவரானவர். அபு ஓமரை கொன்ற அமெரிக்காவை பழிவாங்கும் நடவடிக்கையிலும் எமது அமைப்பு ஈடுபடும்' எனவும் ஒலிப்பதிவு செய்தியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com