இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Thursday, July 26, 2012

றிசார்ட் தவறு செய்திருந்தால் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படுமாம். சுசில் பிறேமஜெயந்த

கொலையாளிகளுக்கு இங்கு மரண தண்டனை உள்ளது. அதனால் அமைச்சர் ரிசாட் பதியுத்தீனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவ்வதா என்பது பற்றிக் கூறமுடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர் கூட்டமைப்பு செயலாளர் சுசில் பிறேமஜயந்த கூறுகின்றார்.

இது தொடர்பாக குற்ற விசாரணைத் திணைக்களத்தின் அறிக்கையின் படி தீர்மானம் மேற்கொள்ளப்படும். இதை யார் செய்திருந்தாலும் தராதரம் பார்க்காது தண்டனை வழங்கப்படும் என்றார் அமைச்சர் சுசில் பிறேமஜயந்த.

மன்னார் நீதவானைத் தொலைபேசியில் மிரட்டியதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

இந்த விடயம் தொடர்பாக சட்டத்தரணிகள் தொடர்ந்த வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்த கொழும்பு, மேல் நீதிமன்றம் அமைச்சர் பதியுத்தீன் 5/9/2012 ல் நீதிமன்றத்துக்கு வந்து தனது நிலையை விளக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்..

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com