மட்டக்களப்பில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் வின்சட் பாடசாலை பிரதி அதிபர் உட்பட இருவர் பலி
மட்டக்களப்பு மைலம்பாவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு வின்சட் மகளிர் தேசிய உயர்தர பாடசாலையின் பிரதி அதிபர் தங்கேஸ்வரி நாகரெட்னம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரதி அதிபரும் அவருடைய மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்சென்ற அவருடைய மகன் நித்திரை தூக்கத்தில் மின்சாரத் தூணில் மோதியதால், பிரதி அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்சென்ற அவரது மகனான நரேந்திரகுமார் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
அத்துடன மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான திருநாவுக்கரசு ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மதுபோதையில் பொலிஸ் வாகனத்தின் முன்னால் திடீரென பாய்ந்ததால் அந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment