ஜி.எல்.பீரிஸ இன்று எகிப்து நோக்கி பயணமானார்.
அணிசேரா நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமுகமாக இன்று எகிப்து நோக்கி பயணமான வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நாளை இம்மாநாட்டில் இரண்டு பிரதான உரைகளை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கை மற்றும் ஆசிய பசுபிக் நாடுகள் தொடர்பாக இந்த உரைகள் அமைவதுடன் இம்மாநாட்டின் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் எகிப்தின் வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் அல் அலி அமீரை சந்தித்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
0 comments :
Post a Comment