யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்கள் கிளிநொச்சியில்.
வடமாகாணத்தின் கல்வி நடவடி க்கைகளை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் துரித வேலைத்திட்டத் திற்கமைய யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விஞ்ஞான பீடங்களை கிளிநொச்சியில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களுக்கான காணி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாய பீடம் இவ்வருடத்திலும், பொறியியல் பீடம் அடுத்த வருடத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய அரசாங்கம் இத்திட்டத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்குவதுடன்,இலங்கை அரசாங்கம் இதற்காக 394 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுள்ளதாகவும், இது தொடர்பான நிர்மாண பணிகளை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோ கே காந்தா உட்பட பல முக்கிய பிரமுவர்கள் புதிய பீடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ள பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment