அரச மருத்துவர் போராட்டம் கைவிடப்பட்டது
பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன் வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை முதல் மேற்கொண்ட சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த தகவலை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடக குழு உறுப்பினர் நவின் சொய்சா வெளியிட்டுள்ளார்.
அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், தமது பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க இணக்கம் காணப்பட்டதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் நவின் சொய்சா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்ட சேவை புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் மருத்துவமனை நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரச வைத்தியர்கள் மேற்கொண்டு வரும் பணிப் பகிஷ்கரிப்பை உடன் நிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்தது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர் ஒருவர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருந்த மனுவொன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த தடை உத்தரவு எதிர்வரும் 25 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment