சில பிரிவினவாத கட்சிகளின் ஈழக் கோரிக்கைக்கு இந்திய எதிர்க்கட்சித் தலைவர் கடும் விமர்சனம்
விடுதலைப்புலிகள் இயக்கத்தால் முன்பு உருவாக்கப்பட்டு, அவர்களது அரசியல் அமைப்பாக செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஐக்கிய இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வை வேண்டிநிற்கும் நிலையில் தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகளின் ஒரு தனியான தமிழ் ஈழ கோரிக்கையை இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் விமர்சித்துள்ளார்.
அண்மையில் ,இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வை எட்டவேண்டுமென்பதே தனது விருப்பம் எனத் தெரிவித்தனர் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள், இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வை வேண்டிநிற்கும போது ஏன் இவ்வாறு சில பிரிவினவாதப் போக்குள்ள கட்சிகள் பிரிவினைக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இந்தியாவின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் எப்படி மதிக்கப்படுகிறதோ அதுபோல ,இலங்கையின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் ஐந்தாவது அரச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment