Friday, May 11, 2012

சவுதி அரேபிய உளவுத்துறையில் பணியாற்றிய அல்கொய்தா தீவிரவாதி.

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத் தலைவர் பின்லேடனின் முதலாமாண்டு நினைவு தினத்தின்போது, அமெரிக்க விமானத்தை குண்டுவைத்துத் தகர்க்க ஏமனில் இருந்து வந்த அல்கொய்தா தீவிரவாதி ஒருவன் முயற்சித்தான். ஆனால் இந்த சதியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்தனர். அந்த தீவிரவாதியும் கைது செய்யப்பட்டான். அவன் தனது உள்ளாடைக்குள் வெடிகுண்டை மறைந்து வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தான்.

அமெரிக்க விமானத்தை தகர்க்க அல்கொய்தா இயக்கத்தால் அனுப்பப்பட்ட அந்த தற்கொலைப்படை தீவிரவாதி, சவுதி அரேபியாவில் உளவுத்துறையில் பணியாற்றியவன் என்ற திடுக்கிடவைக்கும் தகவல் இப்போது தெரியவந்துள்ளது.

ஆனால் அவனது பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. அந்த தீவிரவாதி சவுதி உளவுத்துறையில் பணியாற்றியவன் என்ற தகவலை, அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ கண்டுபிடித்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், 'விமானத்தை தகர்க்க முயன்ற தீவிரவாதி சவுதி அரேபிய உளவுத்துறையில் முன்பு பணியாற்றியுள்ளான். அதன் மூலம் அமெரிக்க விமானங்கள், விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவன் எளிதாகத் தெரிந்து கொண்டுள்ளான். தாக்குதல் நடத்துவதற்காக கடந்த மாதம் அவன், யேமனில் இருந்து புறப்பட்டுள்ளான். எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்ட இரண்டு வெடிகுண்டுகளுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக சென்றுள்ளான்' என்று கூறப்பட்டிருந்தது.

இதுவரை இவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்ற விடயம் பிடிபடாமல் இருந்தது. ஆனால் தற்போது அவன் இங்கிலாந்தை சேர்ந்தவன். அங்குள்ள மத்திய கிழக்கு பகுதியில் அவன் தங்கியிருந்தான் என அமெரிக்க உளவுத்துறை அறிவித்துள்ளது.

ஆனால் இதை இங்கிலாந்து உளவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவன் தங்கள் நாட்டை சேர்ந்தவன் இல்லை என கூறியுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது டெட்ராஸ்ட் வந்த அமெரிக்க விமானத்தில் நைஜீரியாவை சேர்ந்த தீவிரவாதி இது போன்று ஜட்டிக்குள் வெடிகுண்டு கடத்தி வந்தான். அப்போது பாதுகாப்பு குளறுபடி காரணமாக முதலில் அது கண்டு பிடிக்கப்படவில்லை.

தற்போது மெட்டல் டிடெக்டர் மூலம் கண்டு பிடிக்க முடியாத அளவில் அதி நவீனமான ஜட்டி வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு நாச வேலையில் தீவிரவாதிகள் ஈடுபட இருப்பது தெரிய வந்தது. எனவே அமெரிக்க உளவுத்துறை தீவிரமான சோதனைக்கு பிறகு அந்த வெடி குண்டை கண்டு பிடித்து சதியை முறியடித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com