இனிமேல் முச்சக்கர வண்டியில் பயணிகள் ஆசனத்தில் மூவர் - மீறினால் சட்டநடவடிக்கை
முச்சக்கர வண்டி, பயணிகள் ஆசனத்தில் இன்று முதல் மூன்று பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த சட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று முதல் இது கட்டாயப்படுத்தப்படுவதாக பொலிஸார் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளில் மூன்றுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றி செல்வதால் ஏற்படுகின்ற வீதிவிபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் பயணிகள் ஆசனத்தில் மூன்றுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதிகள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமது நாளாந்த சவாரி குறைந்து வருமானம் குறையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment