பெண் கடற்படைச் சிப்பாயைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த கடற்படை வீரர்
திருகோணமலை கடற்படைத் தளத்தில் சேவையாற்றும் ஒரு கடற்படை வீர்ர் தன்னுடன் பணியாற்றும் ஒரு பெண் சிப்பாயைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று பிற்பகலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. படைவீர்ர் இப்பெண் சிப்பாயைத் துரத்தித் துரத்திச் சுட்டுக் கொலைசெய்துவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய இக்கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனிப்பட்ட பிரச்சினையே காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது.
கடற்படையின் ஒழுக்காற்றுப் பிரிவு மற்றும் திருகோணமலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment