மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத கொத்து ரொட்டியை விற்பனை செய்தவருக்கு அபராதம்
மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத கழிவுகள் சேர்ந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட உணவக உரிமையாளருக்கு நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் ஏ.என்.எம்.பி அமரசிங்க 7 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்தார்.
நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் இரவு நேர உணவகம் ஒன்றை நடத்தி வந்த உரிமையாளர் ஒருவருக்கே கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி அபராத தொகை விதிக்கப்பட்டது.
நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஈ.ஏ. மோமரத்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அபராதம் விதிக்கப்பட்டுள்ள உணவகத்தில் தயாரிக்கப்பட்ட கொத்து ரொட்டியில் கழிவுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment